வயிற்றிலிருக்கும் குழந்தையின் ஸ்கேனை பார்த்து பயத்தில் உறைந்த தாய்!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

வயிற்றிலிருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை அறிவதற்காக இளம் தாய் ஒருவர் ஸ்கேன் செய்ய, ஸ்கேனில் தெரிந்த உருவத்தைக் கண்டு பயத்தால் உறைந்தார்.

விர்ஜினியாவைச் சேர்ந்த Iyanna Carrington (17), தனது வயிற்றிலிருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை அறிவதற்காக ஸ்கேன் செய்துகொண்டார்.

அவருக்கு ஸ்கேன் செய்த தாதி, அவரது வயிற்றிலிருப்பது ஒரு பெண் குழந்தை என்று கூறி, அந்த குழந்தையின் அழகிய முகத்தைக் காட்டினார்.

அவர் அப்படியே அந்த குழந்தையின் முகத்தை ரசித்துக் கொண்டிருக்க, திடீரென அந்த குழந்தை கண்ணை உருட்டி விழித்ததைக் கண்டு திடுக்கிட்டுப்போனார் Iyanna.

தனது முட்டைக்கண்களை உருட்டி அந்த குழந்தை பார்ப்பதைக் கண்டு அது ஒரு பேய்க்குழந்தை என்று எண்ணி, பயத்தில் உறைந்துபோனார் அவர்.

பிறகு அவருக்கு ஸ்கேன் செய்த அவரது தாதி, இப்படி ஸ்கேனில் பேய் மாதிரி குழந்தை தெரிவது சாதாரண விடயம்தான், அதில் கவலைப்பட ஒன்றுமில்லை என்று கூறிய பின்னரே, Iyannaவுக்கு பயம் நீங்கியுள்ளது.

அந்த படத்தை சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்துள்ள Iyanna, நான் இப்போது அந்த பேய்க்குழந்தையை அதிகமாக நேசிக்க ஆரம்பித்துவிட்டேன் என்கிறார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...