இரட்டைக்கோபுர தாக்குதலுக்கு முந்தைய தினம் காணாமல் போன கேரள இளம்பெண்: ஹீரோவா கபடவேடதாரியா?

Report Print Balamanuvelan in அமெரிக்கா

கேரளாவில் பிறந்த ஒரு பெண் அமெரிக்காவில் இரட்டைக்கோபுர தாக்குதலுக்கு முந்தைய தினம் காணாமல் போனார்.

Sneha Anne Philip என்ற அந்த பெண் ஒரு மருத்துவரானதால், தாக்குதலுக்குள்ளானவர்களுக்கு உதவச் சென்றபோது கட்டிடத்துக்குள் சிக்கி உயிரிழந்திருக்கலாம், அவர் ஒரு ஹீரோ என அவரது குடும்பம் எண்ணியிருந்தது.

2003இல் Snehaவின் கணவர் இரட்டைக்கோபுர தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான இழப்பீடு கோரி விண்ணப்பித்தார்.

இதற்கிடையில், நியூயார்க் பொலிசார் தங்கள் பக்கத்து விசாரணையை மேற்கொண்டார்கள்.

அவர்களது விசாரணை அறிக்கை, Snehaவின் வழக்கில் முற்றிலும் வித்தியாசமான ஒரு கோணத்தை வெளிப்படுத்தியது.

அதாவது Sneha கணவனுக்கு தெரியாமல் இரட்டை வாழ்க்கை வாழ்ந்துள்ளார், மதுபான விடுதிகளுக்கு செல்லும் அவர், அங்கு சந்திக்கும் பெண்களை வீட்டுக்கு அழைத்து வந்து, அல்லது அவர்களுடன் இரவில் வெளியே தங்கி ஓரினச்சேர்க்கை வாழ்க்கை வாழ்ந்துள்ளார் என்று பொலிசாரின் அறிக்கை தெரிவித்தது.

Sneha மதுபானத்திற்கு அடிமையானவர் என்பதையும், அதன் காரணமாக வழக்கு ஒன்றில் அவர் சிக்கியதாகவும், சிறையில் கூட சில நாட்கள் செலவிட்டதாகவும், அடிக்கடி அவர் இரவில் வெளியில் தங்குவது உண்மைதான் என்றும் Snehaவின் கணவரான Ron Lieberman ஒப்புக்கொண்டுள்ளார்.

காணாமல் போனதற்கு முந்தைய தினம் சூப்பர் மார்க்கெட் ஒன்றிற்கு சென்ற Sneha, சில உடைகள், உள்ளாடைகள், படுக்கை விரிப்புகள், காலணிகள் ஆகியவற்றை வாங்கியதும் அவர் மீதான சந்தேகத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.

ஆக, இரட்டைக்கோபுர தாக்குதலை பயன்படுத்தி, Sneha தனது ஓரினச்சேர்க்கை காதலியுடன் எங்காவது சென்று புது வாழ்வு ஒன்றை தொடங்க முடிவு செய்திருக்கலாம் என்று பொலிசார் கருதினர்.

எனவே, பொலிசாரின் அறிக்கையின் அடிப்படையில், நீதிபதி ஒருவர், இரட்டைக்கோபுர தாக்குதலில் உயிரிழந்தவர்களின் பட்டியலிலிருந்து Snehaவின் பெயரை நீக்கி விட்டார். இது நடந்தது 2004ஆம் ஆண்டு.

இது Snehaவின் குடும்பத்தினருக்கு பெரும் அடியாக அமைந்தது. Snehaவின் குடும்பத்தினர் இதை எதிர்த்து நீதிமன்றம் சென்றார்கள்.

அவர் மீது விழுந்த கறையை அகற்ற துக்கத்துடனேயே தொடர்ந்து போராடினார்கள். கடைசியாக ஐந்து ஆண்டுகளுக்குப்பிறகு, 2008ஆம் ஆண்டு மேல் முறையீட்டு நீதிமன்றம் ஒன்று ஏற்கனவே எழுதப்பட்ட தீர்ப்பை மாற்றி எழுதியது.

Sneha, தாக்குதல் நடந்த அன்று காலை, இரட்டைப்போபுர கட்டிடத்திற்கு சென்றார் என்பதற்கு நேரடி ஆதாரம் இல்லையென்றாலும், அவர் அன்று காலை அங்கேதான் இறந்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்பதைத்தான் ஆதாரங்கள் காட்டுகின்றன, மற்றவை எல்லாம் வெறும் கணிப்புகளாகத்தான் இருக்க முடியும் என்று தீர்ப்பளித்தார் நீதிபதி.

எனவே Sneha Anne Philip, இரட்டைக்கோபுர தாக்குதலில் உயிரிழந்தவர்களின் பட்டியலில் 2,751ஆவது நபராக அதிகாரபூர்வமாக சேர்க்கப்பட்டார்.

இரட்டைக்கோபுர தாக்குதலில் உயிரிழந்தவர்கள் நினைவாக மன்ஹாட்டனில் எழுப்பப்பட்ட நினைவிடத்தில் பொறிக்கப்பட்டுள்ள பெயர்களில் அவரது பெயரும் சேர்க்கப்பட்டது.

இது, Sneha தாக்குதலில் சிக்கியவர்களுக்கு உதவச் சென்று உயிரிழந்த ஹீரோவா அல்லது இரட்டை வேடதாரியா என்ற குழப்பத்திலும் மன வேதனையிலும் பல ஆண்டுகள் தவித்த Snehaவின் குடும்பத்தாருக்கு பெரும் ஆறுதலை அளித்துள்ளது!

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்