புயலில் இருந்து உயிர்தப்பி அழுதுகொண்டே பள்ளிக்கு வந்த சிறுவன்... நெஞ்சை உருக்கும் வீடியோ

Report Print Vijay Amburore in அமெரிக்கா

புளோரிடா மாகாணத்தில் கோரத்தாண்டவம் ஆடிய புயலில் இருந்து தப்பிய சிறுவனை கட்டியணைத்து அவர்களுடைய நண்பர்கள் ஆறுதல் கூறும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் ஏற்பட்ட டோரியன் புயலால் அப்பகுதி முழுவதும் சிதைந்து போனது. இதில் அப்பாவி பொதுமக்கள் சிலர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஏராளமானோர் தங்களுடைய வீடுகளை இழந்து தவித்தனர்.

இந்த நிலையில் பஹாமாஸ் பகுதியை சேர்ந்த மாகாய் சிம்மன்ஸ் என்ற 3 வயது சிறுவன் நீண்ட நாட்களுக்கு பின்னர் திங்கட்கிழமையன்று பள்ளி திரும்பினான்.

அவனை பார்த்ததும் பள்ளித்தோழர்கள் சூழ்ந்துகொண்டு கட்டிப்பிடித்து தங்களுடைய, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதனால் அந்த சிறுவன் அழ ஆரம்பித்துவிட்டான். இந்த வீடியோவை சிறுவனின் தாயார் தன்னுடைய சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பதிவிட்ட சில நிமிடங்களில் 15000க்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்