வெளிநாட்டில் தமிழர்கள் உள்ளிட்ட 8 பேர் அதிரடி கைது: அம்பலமாகும் பின்னணி தகவல்

Report Print Arbin Arbin in அமெரிக்கா

வலி நிவாரண மாத்திரைகளை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்து, அமெரிக்காவில் சட்ட விரோதமாக விற்பனை செய்த தமிழர்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அபின் என்ற போதை கலந்த வலி நிவாரண மாத்திரைகள் பல நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு அமெரிக்காவில் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படுகின்றன.

இவை மக்களுக்கு பல்வேறு உபாதைகளை ஏற்படுத்துவதோடு, சில சமயங்களில் மரணத்தை ஏற்படுத்தி விடுகிறது.

கடந்த 2017 ஆம் ஆண்டு மட்டும் அதிக போதை மருந்து பயன்பாட்டால் 47,600 பேர் மரணமடைந்துள்ளதாக அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் இருந்து ‘Tramadol’ எனப்படும் வலி நிவார மாத்திரைகளை இறக்குமதி செய்து வாடிக்கையாளர்களுக்கு தபால் மூலம் விற்பனை செய்ததாக,

எழில் செழியன் கமல்தாஸ் (46), முகுல் சுக் (24), குலாப் குலாப்(45) தீபக் மன்சந்தா(43), பார்த்திபன் நாராயணசாமி(58) பல்ஜீத் சிங்(29), ஹர்ப்ரீத் சிங்(28) விகாஸ் எம் வர்மா(45) ஆகிய எட்டு பேரை அமெரிக்க பொலிசார் கைது செய்து, சட்ட விரோத மருந்து விற்பனை, நிதி மோசடி வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

இந்த மருந்தில் அபின் போதை கலக்கப்பட்டு இருக்கிறது. இவர்கள் மீதான குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் எழில் செழியன் கமல்தாஸ்க்கு 25 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் எஞ்சியவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் கிடைக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்