பின் லேடன் மகன் கொல்லப்பட்டார்... உறுதி செய்த அமெரிக்க அதிபர் டிரம்ப்!

Report Print Vijay Amburore in அமெரிக்கா

அல்கொய்தா தலைவர் பின் லேடனின் மகன் ஹம்சா பின் லேடன், அமெரிக்க பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் போது கொல்லப்பட்டதாக அதிபர் டிரம்ப் உறுதி செய்துள்ளார்.

அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின் லேடன், கடந்த 2011ம் ஆண்டு மே மாதம் பாகிஸ்தானில் உள்ள அபோடாபாத் நகரில் அமெரிக்க பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதனையடுத்து அந்த அமைப்பின் தலைமை பொறுப்பை ஏற்ற அவரது மகன் ஹம்சா பின் லேடன், தனது தந்தையை கொலை செய்த அமெரிக்காவையும், அமெரிக்க மக்களையும் பழிக்குப்பழி வழங்குவேன் என எச்சரிக்கை விடுத்தான்.

2017ம் ஆண்டு ஹம்சா பின் லேடனை சர்வதேச தீவிரவாதியாக அமெரிக்க அறிவித்திருந்தது. மேலும், அவருடைய இருப்பிடம் பற்றி தகவல் கொடுத்தால் 1 மில்லியன் டாலர் பரிசுத் தொகை வழங்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியிட்டது.

இதனை தொடர்ந்து கடந்த ஆகஸ்டு மாதம் அமெரிக்காவை உள்ளடக்கிய ஒரு நடவடிக்கையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஹம்சா பின்லேடன் கொல்லப்பட்டார் என உளவுத்துறை பரபரப்பு தகவல் வெளியிட்டனர்.

இந்த நிலையில் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், அல் கொய்தா உறுப்பினரான 30 வயதான ஹம்சா, 'ஆப்கானிஸ்தான் / பாகிஸ்தான் பிராந்தியத்தில் அமெரிக்காவின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் கொல்லப்பட்டார்' என்பதை டிரம்ப் உறுதி செய்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...