மரணத்தை இருமுறை வென்று சாதித்த நபர்: அவரை தேடிவந்த மிகப்பெரிய அதிர்ஷ்டம்

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவின் ஓரிகன் மாகாணத்தில் இருமுறை புற்றுநோயால் தாக்கப்பட்டு உயிர் பிழைத்த நபருக்கு லொட்டரியில் பெரும் அதிர்ஷ்டம் தேடிவந்துள்ளது.

ஓரிகன் மாகாணத்தில் குடியிருக்கும் ஸ்டு மெக்டொனால்ட் என்பவரே தற்போது லொட்டரியில் சுமார் 4.6 மில்லியன் டொலர் வென்றுள்ளார்.

இது தொடர்பில் பேசிய மெக்டொனால்ட், தாம் பெரிய அதிர்ஷ்டசாலி எனவும், ஒன்றல்ல இருமுறை புற்றுநோயில் இருந்து தப்பித்துள்ளேன் எனவும், இது உண்மையில் வியப்பளிக்கும் தகவல் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தமது மனைவி கிளாடியாவுடன் குடியிருக்கும் மெக்டொனால்ட், வாய்ப்பு அமையும் போதெல்லாம் லொட்டரி சீட்டுகள் வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

ஒவ்வொருமுறையும் தமது கணவரிடம், இந்தமுறையாவது பரிசு விழும் லொட்டரியை பார்த்து வாங்குகள் என மனைவி கிளாடியா நினைவுப்படுத்துவது வழக்கம்.

ஆனால், இந்தமுறை அதாவது செப்டம்பர் 7 ஆம் திகதி, கிளாடியா தமது கணவரிடம் நினைவுப்படுத்த மறந்துள்ளார்.

அன்றைய நாள் மெக்டொனால்ட் வெற்றியுடன் திரும்பியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார் கிளாடியா. மாகாண வரிகள் போக தற்போது மெக்டொனால்ட் சுமார் 1.56 மில்லியன் டொலர்கள் பெறுகிறார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers