காதலனை பழி வாங்க வெயிட்டருக்கு டிப்ஸ் கொடுத்த காதலி: எவ்வளவு கொடுத்தார் தெரியுமா?

Report Print Balamanuvelan in அமெரிக்கா

தனக்கு விமான டிக்கெட் வாங்கிக் கொடுக்க மறுத்த காதலனை பழிவாங்க, காதலனின் கிரெடிட் கார்டையே பயன்படுத்தி. பெரிய தொகை ஒன்றை வெயிட்டருக்கு டிப்ஸாக கொடுத்தார் அந்த காதலி.

நியூயார்க்கைச் சேர்ந்த Micahel Crane (29), அதே பகுதியைச் சேர்ந்த தனது காதலியான Serina Wolfe (24)ஐ விடுமுறைக்காக அழைத்துச் சென்றிருக்கிறார்.

அப்போது ஹொட்டல் ஒன்றில் இருவரும் உணவருந்தியிருக்கிறார்கள்.

இருவருக்கும் ஏதோ வாக்குவாதம் ஏற்பட, Serina திரும்பிச் செல்வதற்கான விமான டிக்கெட்டை தான் வாங்கிக் கொடுக்கமாட்டேன் என்று கூறியிருக்கிறார் Micahel.

அந்த நேரத்தில் போதையில் இருந்த Serina, காதலரை பழி வாங்குவதற்காக அவரது கிரெடிட் கார்டை பயன்படுத்தி, வெயிட்டருக்கு 5,000 டொலர்கள் டிப்ஸ் கொடுத்துள்ளார்.

சாப்பிட்ட உணவுக்கான தொகையே சுமார் 56 டொலர்கள்தான், அப்படியிருக்கும்போது, டிப்ஸ் மட்டுமே 5,000 டொலர்கள் கொடுத்துள்ளார் Serina.

பின்னர் தனது கணக்கிலிருந்து 5,000 டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதை அறிந்த Micahel பொலிசாருக்கு தகவலளித்துள்ளார்.

அந்த பணத்தை Serinaதான் செலவிட்டிருக்கிறார் என்ற உண்மை தெரியவரவே, பொலிசார் அவரை கைது செய்துள்ளார்கள்.

என்றாலும், பின்னர் Serina மீதான வழக்கை Micahel வாபஸ் வாங்கிவிட்டார்.

டிப்ஸாக கொடுக்கப்பட்டிருந்த 5,000 டொலர்களை அந்த வெயிட்டர் பெண் திருப்பிக் கொடுக்கவேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், அவருக்கு 300 டொலர்கள் டிப்ஸ் கொடுத்து, எல்லா பிரச்னைகளையும் சுமூகமாக முடிவுக்கு கொண்டு வந்துள்ளார் Micahel.

ஆனால் ஒரே சோகம், இப்போது Micahel, Serinaவின் முன்னாள் காதலராகிவிட்டார், ஆம் காதலர்கள் பிரிந்துவிட்டார்கள்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்