பிறக்கவிருக்கும் பிள்ளைக்காக தனது ஒரு காலை வெட்டி நீக்க முடிவெடுத்த ஒரு தாயார்: தியாகத்தின் உச்சம்!

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பிறக்கவிருக்கும் சிசுவுக்காக சொந்தம் கால் ஒன்றை வெட்டி நீக்க முடிவெடுத்த தாயார் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

டெக்சாஸ் மாகாணத்தில் குடியிருக்கும் 29 வயது கெய்ட்லின் கோனர் என்ற யுவதியே தமது கால் ஒன்றை வெட்டி நீக்க முடிவெடுத்தவர்.

தனியார் நிறுவனம் ஒன்றில் Marketing executive பொறுப்பில் இருக்கும் இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் திகதி தமது முன்னால் கணவருடன் தங்கள் குடும்பத்தை சந்திக்கும் நோக்கில் பைக்கில் பயணம் செய்துள்ளார்.

அப்போது எதிர்பாராத வகையில் ஒரு கார் இவர்களது இருசக்கர வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது அந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் முன்னாள் கணவர் நூலிழையில் தப்பினார் என்றாலும் கெய்ட்லினின் இடப்பக்க காலுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

நகரவே முடியாத நிலையில் சாலையில் தத்தளித்த அவரை ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தொடர்ந்து அவருக்கு அறுவைசிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த நிலையிலேயே தாம் நான்கு வார கர்ப்பமாக இருப்பது கெய்ட்லினுக்கு தெரியவந்தது.

ஆனால் நடக்கவிருக்கும் அறுவைசிகிச்சையானது வயிற்றில் வளரும் பிள்லைக்கு ஆபத்து என அறிந்த கெய்ட்லின், தமது காலை வெட்டி நீக்க முடிவு செய்துள்ளார்.

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கிடைத்த தமது பிள்ளையின் உயிருக்கு ஆபத்தாக முடிவும் என மருத்துவர்களின் எச்சரிக்கையை அடுத்து தனது காலை வெட்டி நீக்க அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

வயிற்றில் இருக்கும் பிள்ளையின் உயிருக்கு ஆபத்து ஏற்படாத வகையில் கெய்ட்லின் காலுக்கு 6 அறுவைசிகிச்சைகள் மேற்கொண்டும், முழுமையான வெற்றி கிட்டாத நிலையிலேயே அவரது காலை வெட்டி நீக்க மருத்துவர் முடிவுக்கு வந்துள்ளனர்.

மட்டுமின்றி, இந்த காலகட்டத்தில் குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் மன அழுத்தம் குறைக்க தாம் பெரிதும் முயன்றதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 ஆம் திகதி கெய்ட்லின் ஒரு பெண் பிள்ளைக்கு தாயானார். பிள்ளை பிறப்பதற்கு முன்னரே செயற்கை காலால் நடப்பதற்கும் கெய்ட்லின் கற்றுக் கொண்டுள்ளார்.

மட்டுமின்றி தமது விருப்பமான நீச்சல், Paracycling உள்ளிட்டவைகளையும் முறைப்படி கற்றுக் கொண்டுள்ளார்.

தற்போது நான்கு வயதாகும் தமது மகளுடன் கெய்ட்லின் paracycling செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்