காணாமல் போன இளம்பெண்ணின் ஆபாச படங்கள் இணையத்தில் வெளியானதால் பதற்றத்தில் தாய்!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

அமெரிக்காவில் சில நாட்களுக்கு முன் காணாமல் போன அழகிய இளம்பெண்ணின் ஆபாச புகைப்படங்கள் ஆபாச தளம் ஒன்றில் வெளியானதையடுத்து அவரது குடும்பத்தினர் பதற்றத்தில் உள்ளனர்.

Westhamptonஇல் வசிக்கும் Aviana Weaver (17) என்ற இளம்பெண் 12ஆம் திகதி மாயமானார்.

மகள் வீடு திரும்பாததால் Avianaவின் தாய் Angelica Scarlett பொலிசில் புகாரளித்த நிலையில், அவருக்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது.

அந்த செய்தியில், Aviana அவரது விருப்பத்துக்கு மாறாக, ஒரு இடத்தில் பிடித்து வைக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

தனது மகளை எப்படியாவது கண்டுபிடித்துவிடும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ள Scarlett, தனது நடவடிக்கைகளை தொடர்ந்து பேஸ்புக்கில் வெளியிட்டுவந்தார்.

Aviana பிலதெல்பியாவில் ஒரு இடத்தில் காணப்பட்டதாக அவருக்கு தகவல் வர, கால் நடையாகவே அந்த பகுதிக்கு சென்ற Scarlett, தனது மகள் காணாமல் போனது குறித்த விளம்பரம் அடங்கிய காகிதங்களை அந்த இடத்திற்கு வருவோர் போவோரிடம் விநியோகித்துள்ளார்.

என்றாலும் எந்த பயனும் இல்லை. இதற்கிடையில் விசாரணையில் இறங்கிய பொலிசாருக்கு மோசமான ஒரு தகவல் கிடைத்துள்ளது.

ஆபாச இணைய தளம் ஒன்றில் Avianaவின் ஆபாச படங்கள் வெளியாகியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

அந்த படங்களில், மிகவும் பயத்துடன் Aviana காணப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளதால் அவரது தாய் Scarlett மிகுந்த பதற்றமடைந்துள்ளார்.

தனது மகள் வீட்டை விட்டு ஓடிப்போகும் பெண் அல்ல என்று தெரிவித்துள்ள Scarlett, அவள் நன்றாக படிப்பவள் என்றும், அவளது பொருட்கள் எல்லாம் பத்திரமாக வீட்டில் இருப்பதாலும், அவளுக்கு பிலதெல்பியாவில் நண்பர்கள் யாருமில்லை என்பதாலும், அவள் காணாமல் போனது தனக்கு மிகுந்த பயத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார் அவர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்