தாறுமாறாக வணிக வளாகத்திற்குள் ஓடிய கார்.. சிதறி ஓடிய மக்கள்.. வைரலான வீடியோ!

Report Print Kabilan in அமெரிக்கா

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் உள்ள வணிக வளாகம் ஒன்றில், கார் ஒன்றை தாறுமாறாக ஓட்டிய இளைஞரை பொலிசார் கைது செய்தனர்.

இல்லினாய்ஸ் மாகாணத்தில் சிகாகோவின் புறநகரான ஷாம்பர்க்கில் உள்ளது உட்ஃபீல்ட் மால். இந்த மாலில் கார் ஒன்று தாறுமாறாக ஓடுவதாக பொலிசாருக்கு தகவல் வந்தது.

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார், வேகமாக காரை செலுத்தி மாலில் சேதத்தை ஏற்படுத்திய, 22 வயது இளைஞரை கைது செய்தனர்.

அந்த இளைஞரை பொதுமக்கள் பிடித்து வைத்திருந்ததாகவும், இச்சம்பவம் எந்தவொரு பயங்கரவாத செயலுடனும் தொடர்புடையது என்பதற்கான அறிகுறி எதுவும் இல்லை என்றும் பொலிசார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு முதலில் வந்த தகவலில், துப்பாக்கிச்சூடு நடந்ததாகவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், அதன் பின்னர் நடந்த விசாரணையில் கார் மோதியதில் கடை ஒன்றின் முகப்பு கண்ணாடி உடைந்ததும், அதனை துப்பாக்கிச்சூடு என கருதிய பொதுமக்கள் பொலிசாருக்கு தகவல் அளித்ததும் தெரியவந்தது.

இந்நிலையில், இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்