அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை

Report Print Abisha in அமெரிக்கா

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சீக்கிய பொலிஸ் அதிகாரி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ளது ஹூஸ்டன் நகரில் ஹாரிஸ் கவுண்டியின் காவல்துறை அதிகாரியாக இருந்தவர் சந்தீப் சிங் தலிவால். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு சீக்கியர் ஆவார்.

இவர் பணியில் ஈடுபட்டிருந்த போது, அந்நகரில் நிறுத்தப்பட்டிருந்த காரின் ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டதாக கூறப்படுகின்றது. பின் அவர் அங்கிருந்து தனது வாகனத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் அந்த காரில் இருந்த நபர் வெளியில் வந்து சந்தீப் சிங்யை சுட்டுள்ளார்.

இதை அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால், அவர் முன்னதாக இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

குற்றவாளியின் காரில் உள்ள டேஷ் கமெராவில் பதிவாகியுள்ள காட்சிகள் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட பொலிசார், அவர் பல்வேறு கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என்று கண்டறிந்துள்ளனர். மேலம் அவர் எதற்காக சுட்டார் என்பது குறித்து பொலிசார் விசாணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்