குழந்தையை மறந்து குடிக்கப்போன தாய்: வாந்தியின் நடுவே இறந்து கிடந்த சோகம்!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

கலிபோர்னியாவில் தனது குழந்தையை காருக்குள் வைத்து பூட்டியதோடு ஹீட்டரையும் ஓட விட்டுச் சென்ற ஒரு தாய், நண்பர் ஒருவருடன் மது அருந்த சென்றுள்ளார்.

காரின் கண்ணாடிகள் மூடப்பட்ட நிலையில், ஹீட்டரும் இயங்கிக் கொண்டிருக்க, அந்த குழந்தை சூடு தாங்காமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

மது அருந்தி விட்டு அங்கேயே நன்றாக உறங்கிவிட்ட அந்த பெண், ஐந்து மணி நேரத்திற்குப்பின் காருக்கு திரும்ப அங்கே அவரது இரண்டு வயது குழந்தை வாந்தி எடுத்து வாந்திக்கு நடுவில் வெப்பத்தில் உடல் முழுவதும் சிவந்துபோய் கிடந்திருகிறது.

June Love Agosto என்ற அந்த குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றும், மாரடைப்பு ஏற்பட்டிருந்ததால் அவளை காப்பாற்ற முடியவில்லை.

Juneஇன் தாயார் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்