மர்ம நபர்களால் கடத்தப்பட்ட இந்திய தொழிலதிபர்... மலையில் அனாதை பிணமாக கிடந்த துயரம்

Report Print Basu in அமெரிக்கா

அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்திய தொழிலதிபர் தொடர்பில் Santa Cruz County Sheriff's அலுவலகம் துரதிர்ஷ்டவசமான செய்தியை வெளியிட்டுள்ளது.

கலிபோர்னியாவின் சாண்டா குரூஸ் பகுதியில் வசித்து வருபவர் Atre Net Inc நிறுவனத்தின் உரிமையாளரும், குடியுரிமை இல்லாத இந்தியருமான Tushar Atre (50).

கடந்த அக்டோபர் 1ம் திகதி அவரது வீட்டில் வைத்து பிஎம்டபிள்யூ காருடன் கடத்தப்பட்டார். சம்பவத்தன்று தனது வெள்ளை பிஎம்டபிள்யூ காருக்குள் ஏறும் போது Atre கடைசியாக காணப்பட்டுள்ளார்.

Atre கடத்தப்பட்டதை அதிகாரிகள் உறுதி செய்தனர். இந்நிலையில், செல்வாய்கிழமை சாண்டா குரூஸ் மலைப்பகுதியில் வைத்து காரை கண்டுபிடித்த அதிகாரிகள், அப்பகுதியிலே கொல்லப்பட்டு கிடந்த Atre-வின் உடலையும் கண்டெடுத்துள்ளனர்.

(Photo via AP)

கண்டெடுக்கப்பட்ட உடல் Atre உடையது என அதிகாரிகள் உறுதிசெய்துள்ளனர், மேலும், கொள்ளை அடிப்பதே இக்கொலைக்கான காரணம் என நம்புவதாக பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கொலையுடன் தொடர்புடைய இரண்டு பேரை பொலிசார் தீவிரமாக தேடி வருவதாக உள்ளுர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்