சீனா விமானத்தில் கண்டுபிடிக்கப்பட்ட விரிசல்... அதிரடி உத்தரவிட்ட அமெரிக்கா!

Report Print Abisha in அமெரிக்கா

165, போயிங் 737 என்.ஜி. விமானங்களின் கட்டுமானத்தில் விரிசல்கள் உள்ளதா என்பது தொடர்பாக உடனடியாக ஆய்வு நடத்துமாறு விமான நிறுவனங்களுக்கு அமெரிக்க அதிரடி உத்தரவிட்டுள்ளது.

737 மேக்ஸ் ரக விமானங்கள் எத்தியோப்பியா மற்றும் இந்தோனேசியாவில் விழுந்து நொறுங்கியதில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதை அடுத்து அந்த ரக விமானங்களின் போக்குவரத்து முற்றாக நிறுத்தப்பட்டன. இதனால், போயிங் நிறுவனம் நிதி நெருக்கடியைச் சந்தித்தது. இதனை தொடர்ந்து தற்போது புதிய சிக்கலை அந்த விமான நிறுவனம் சந்தித்துள்ளது.

அது, சீனாவில் 737 என்ஜி ரகத்தின் விமானத்தில் மாற்றங்கள் மேற்கொண்ட போது, அதன் கட்டுமானத்தில் விரிசல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த அமெரிக்கா 737 என்.ஜி. ரகத்தைச் சேர்ந்த விமானங்களில் சோதனை மேற்கொள்ளுமாறு தங்கள் நாட்டு விமான நிறுவனங்களுக்கு அமெரிக்க விமானப் போக்குவரத்து நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. குறிப்பிட்ட அளவு பயணங்களை மேற்கொண்ட 165 விமானங்களில் விரைவாக சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

விரிசல்கள் குறித்து உன்னிபாக கவனித்து அறிக்கை அளிக்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க விமான நிறுவனங்களில், 1,911 என்ற எண்ணிக்கையில் 737 என்.ஜி. ரக விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்