எஜமானரை காப்பாற்ற பாம்புடன் போராடிய பூனை: கடவுள்தான் அதை அனுப்பினார் என நெகிழும் குடும்பம்!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

அமெரிக்காவின் டென்னசியைச் சேர்ந்த ஒருவர் வீட்டில் வளர்க்கப்பட்ட பூனை, பாம்பு ஒன்றை கொன்று அவரது உயிரைக் காப்பாற்றியுள்ளது.

Jimmie Nelson (81), ஒரு நாள் இரவில் பூனை சத்தமிடும் சத்தத்தைக் கேட்டு, பூனை விளையாடுவதாக எண்ணிக்கொண்டிருக்கிறார்.

ஆனால் இரண்டு நட்களுக்குப்பின் பின் மேசைக்குக் கீழ் ஒரு கொடிய விஷப்பாம்பு இறந்து கிடப்பதைக் கண்டிருக்கிறார் அவர்.

அந்த பாம்பை உற்றுக் கவனித்த அவரது மகள், அந்த பாம்பின் கழுத்திலும் தலையிலும் நகம் பட்ட அடையாளமும் கடிபட்ட காயமும் இருப்பதைக் கண்ட பிறகுதான், தனது தந்தையின் செல்லப்பூனையான Shellyதான் அதை கொன்றிருப்பதை புரிந்துகொண்டிருக்கிறார்.

Nelsonஇன் மகள் Teresa Seals கூறும்போது, தனது தாய் உயிருடன் இருக்கும்வரை, பூனை ஒன்றை தனது தந்தை வீட்டுக்குள் கொண்டு வருவதை அவர் அனுமதிக்கவில்லை என்றும், அவர் இறந்தபின் தனக்கு துணையாக ஒரு பூனையை தன் தந்தை வளர்த்து வருவதாகவும் தெரிவித்தார்.

கடவுள்தான் அந்த பூனையை அனுப்பியிருக்கிறார் என்று தான் நம்புவதாக தெரிவிக்கும் Teresa Seals, அவர் அந்த பூனையை வளர்க்க வேண்டும் என்று விதி இருந்திருக்கிறது போலும் என்கிறார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்