திருமணத்திற்கு முன்தினம் போதையில் மணமகன் செய்த காரியம்: அதிர்ச்சியடைந்த மணமகள் தோழி

Report Print Vijay Amburore in அமெரிக்கா

அமெரிக்காவில் திருமணத்திற்கு முன்தினம் இரவு மணமகளின் தோழியிடம் அத்துமீறியதாக மணமகன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த டேனியல் கார்னி (28) என்கிற மணமகன் திருமணத்திற்கு முன்தினம் இரவு தன்னுடைய நண்பர்களுக்கு மது விருந்து கொடுத்துள்ளார்.

அதில் அனைவருமே அதிகளவில் மது அருந்திவிட்டு போதையில் இருந்துள்ளனர். இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட மணமகன், தன்னுடைய வருங்கால மனைவியின் தோழியிடம் அத்துமீறி நடந்துள்ளார்.

அதிகாலை விடிந்த போது தன்னுடைய ஆடைகள் அனைத்தும் களைந்திருப்பதை பார்த்து அந்த இளம்பெண், டேனியல் உடன் சண்டையிட்டுள்ளார்.

அந்த நேரத்தில் எதார்த்தமாக அறைக்கு வந்த மணமகள், தன்னுடைய கணவனால் தோழி பாதிக்கப்பட்டிருப்பதை தெரிந்துகொண்டுள்ளார்.

ஆனால் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், கணவனுக்கு ஆதரவாக செயல்பட்டு அவரையே திருமணமும் செய்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக மணமகளின் தோழி கொடுத்த புகாரின் பேரில் பொலிஸார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்