மின்னல் தாக்கி நடுரோட்டில் ஏரிந்த நபர்.. தெய்வம் போல் வந்த பெண்: சிசிடிவி-யில் பதிவான காட்சி

Report Print Basu in அமெரிக்கா

அமெரிக்காவில் மழையில் நாயை நடக்க அழைத்து சென்ற நபர் மின்னல் தாக்கி நடுரோட்டில் சரிந்த சம்பவம் வீடியோவாக வெளியாகியுள்ளது.

டெக்சாஸ் மாகாணத்திலே இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. சம்பவத்தின் போது கடும் மழையில் பாதிக்கப்பட்ட Alex Coreas தனது நாயை நடக்க வெளியே அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது, சாலையில் சென்றுக்கொண்டிருந்து போது அவர் மீது மின்னல் தாக்கியுள்ளது. இதில் நிலைகுலைந்த சம்பவயிடத்திலேயே Coreas சரிய அவரது இதய துடிப்பு நின்றுள்ளது.

நிலைகுலைந்து கிடந்த Coreas கண்ட, அவ்வழியாக வந்த கால்நடை மருத்துவர் Christy Mittler, உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிபிஆர் சிகிச்சை அளித்துள்ளார்.

இதுகுறித்து Christy Mittler கூறியதாவது, நான் சென்று பார்த்தபோது Coreas மூச்சு விடவில்லை, அவரது ஆடை கருகியிருந்தது. அவரது கால்களில் இருந்த காலணிகளும் சாக்ஸும் வெடித்த நிலையில் இருந்தது.

பின்னர், நானும், சக ஊழியர் மற்றொரு அந்நியரும் மீட்பு பணியை தொடங்கினோம் என்று கூறினார். மேலும், மின்னல் தாக்கியதில் சாலையில் துளை விழுந்ததாக குறிப்பிட்டார்.

Coreas-யின் சிகிச்சைக்காக நிதி திரட்டி வரும் குடும்பத்தினர் கூறியதாவது, அவர் மீண்டு வருகிறார், அவருக்கு விலா, தலை பகுதிகளில் எலும்பு முறிவு மற்றும் கண்ணுக்கு வீக்கம் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.

Coreas மிகவும் வேதனையான வலியை அனுபவித்து வருகிறார், அவருக்கு இடது காது கேட்கவில்லை, அதற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்