அமெரிக்காவில் சிக்கிய 18 அடி நீள ராட்சத மலைப்பாம்பு: சிக்கியதிலேயே நீளமான பாம்பு இதுதானாம்!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

அமெரிக்காவில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி ஒன்றிற்குள் நுழைந்துள்ள பாம்புகளை பிடிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பாம்புகளை பிடிக்கும் குழுவினர், 18 அடி நீள மலைப்பாம்பு ஒன்றைப் பிடித்துள்ளனர்.

ப்ளோரிடாவில் பாம்புகளைப் பிடிக்கும் அந்த குழுவினரில், Cynthia Downer மற்றும் Jonathan Lopez என்ற தம்பதி இந்த ராட்சத பாம்பை பிடித்துள்ளனர்.

அந்த பாம்பு 18 அடி 4 இஞ்ச் நீளமும், சுமார் 98 பவுண்டுகள் எடையும் கொண்டதாக இருந்துள்ளது.

ப்ளோரிடா மீன் மற்றும் வன பாதுகாப்பு கமிஷனின் கூற்றுப்படி, இப்பகுதியில் பிடிபட்டதிலேயே இதுதான் மிகப்பெரிய மலைப்பாம்பாகும். அத்துடன், ப்ளோரிடாவில் பிடிபட்டதில் இதுதான் இரண்டாவது பெரிய பாம்பு என்பதும் குறிப்பிடத்தக்கது.

பர்மிய மலைபாம்புகள் எனப்படும் இவ்வகை மலைப்பாம்புகளில், பெண் மலைப்பாம்புகளை பிடிப்பது கடினம் என்று கூறியுள்ள ப்ளோரிடா மீன் மற்றும் வன பாதுகாப்பு கமிஷன், ஒவ்வொரு முறை இனப்பெருக்கம் செய்யும்போதும், அவை 30 முதல் 60 குஞ்சுகளை பொரிக்கும் என்று கூறியுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்