93 கொலை செய்துள்ளேன்: அமெரிக்காவையே அதிரவைத்த சீரியல் கொலைகாரன் வாக்குமூலம்!

Report Print Vijay Amburore in அமெரிக்கா

அமெரிக்காவையே அதிரவைத்த சீரியல் கொலைகாரன் 23 வருடங்களில் 93 பேரை கொலை செய்ததாக ஒப்புக்கொள்ளும் வாக்குமூல வீடியோ காட்சியினை பொலிஸார் தற்போது வெளியிட்டுள்ளனர்.

79 வயதான சாமுவேல் லிட்டில் என்பவர் 1970 முதல் 2005க்கு இடைப்பட்ட காலத்தில் அமெரிக்கா முழுவதும் 93 கொலைகளை செய்ததாக பொலிசாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார். அதில் பெரும்பாலும் பெண்கள் அதிகம் கொலை செய்யப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.

50 கொலைகளில் அவர் ஈடுபட்டதை மட்டுமே எஃப்.பி.ஐ உறுதிப்படுத்தியிருந்தாலும், அவர் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலம் அனைத்தும் நம்பகமானவை என்று புலனாய்வாளர்கள் நம்புகின்றனர்.

அடையாளம் தெரியாத சிலரின் விவரங்களை அவர் நினைவு கூர்ந்ததால், எஃப்.பி.ஐ ஞாயிற்றுக்கிழமை சாமுவேலின் சிலிர்க்கவைக்கும் ஒப்புதல் வாக்குமூலங்களை வெளியிட்டது.

மேலும், அவர் கொலை செய்ததாக வரைந்து கொடுத்த ஓவியங்களையும் வெளியிட்டுள்ளது.

முன்னதாக கடந்த 2014ம் ஆண்டு முதல், மூன்று கொலை சம்பவத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டதை அடுத்து குற்றவாளி சாமுவேல் ஆயுள்தண்டனை அனுபவித்து வருபவது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்