20 புதிய நிலவுகள் கண்டுபிடிப்பு... சூரிய மண்டலத்தில் வரலாற்று சாதனை படைத்த சாடர்ன் கிரகம்

Report Print Basu in அமெரிக்கா

சூரிய குடும்பத்தில் அதிக நிலவுகளை கொண்ட கிரகங்கள் பட்டியலில் ஒரு புதிய வெற்றியாளர் இடம்பிடித்துள்ளார்.

வானியலாளர்கள், சாடர்ன் கிரகத்தை சுற்றி 20 புதிய நிலவுகளைக் கண்டுபிடித்துள்ளனர். சூரிய மண்டலத்தில் ஆறாவதான சாடர்ன் கிராகத்தை மொத்தம் 82 நிலவுகள் சுற்றி வருகின்றன.

இதன் மூலம் சூரிய மண்டலத்தில் அதிக எண்ணிக்கையிலான நிலவுகளைக் கொண்ட கிரகமாக திகழந்து வந்த ஜுபிடரை( 79 நிலவுகள்) பின்னுக்கு தள்ளி சாடர்ன் முதலிடத்தை பிடித்துள்ளது.

இந்த கண்டுபிடிப்பை சர்வதேச வானியல் ஒன்றியத்தின் சிறு கிரக மையம் திங்களன்று அறிவித்தது.

எனினும், மிகப்பெரிய கிரகமான ஜுபிடரே இன்னும் மிகப்பெரிய நிலவுகளைக் கொண்டுள்ளது. இது ஜுபிடருக்கு ஆறுதலாக அமைந்துள்ளது. ஜுபிடரின் பெரிய நிலவான Ganymede பூமியின் பாதி அளவு என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு நேர்மாறாக, சாடர்னின் 20 புதிய நிலவுகள் மிகக் சிறியது, ஒவ்வொன்றும் 5 கி.மீ விட்டம் கொண்டவை. அவற்றில் 16 சாடர்னை பிற்போக்கு திசையில் சுற்றி வருவதாக

கண்டுபிடிப்புக் குழுவை வழிநடத்திய the Carnegie Institution for Science's-ன் Scott Sheppard தெரிவித்துள்ளார்.

புதிய நிலவுகள் ஹவாயில் உள்ள Mauna Kea-வின் Subaru தொலைநோக்கியைப் பயன்படுத்தி கண்டுபிடிக்கப்பட்டன. சாடர்னை இன்னும் 100 சிறிய நலவுகள் சுற்றி வரக்கூடும், அவை விரைவில் கண்டுபிடிக்கப்படும்.

உலகின் மிகப் பெரிய தொலைநோக்கிகள் சிலவற்றைப் பயன்படுத்தி, மாபெரும் கிரகங்களைச் சுற்றியுள்ள சிறிய நிலவுகளை கண்டுபிடித்து வருகிறோம் என்று Sheppard கூறினார்.

சூரிய மண்டலத்தில் கிரகங்கள் எவ்வாறு உருவாகின்றன மற்றும் உருவாகின என்பதை கண்டறிய உதவ அவை முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும், புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட நிலவுகளுக்கு பெயரிட இணையதளம் மூலம் போட்டியை Sheppard அறிவித்தார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்