அந்நாட்டின் பொருளாதாரத்தை முற்றிலும் அழிப்பேன்! எச்சரிக்கை விடுத்த டிரம்ப்

Report Print Kabilan in அமெரிக்கா

சிரியா மீதான தாக்குதல் தொடர்பாக துருக்கியின் பொருளாதாரத்தை முற்றிலும் அழித்து விடுவதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், சிரியாவில் அங்காரா மீது திட்டமிட்ட ராணுவத் தாக்குதலை மேற்கொண்டால், துருக்கியின் பொருளாதாரத்தை முற்றிலுமாக அழித்துவிடுவதாக எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறுகையில், ‘நான் முன்பு கடுமையாக கூறியது போல, மீண்டும் வலியுறுத்துகிறேன். துருக்கியின் பொருளாதாரத்தை நான் முற்றிலுமாக அழிப்பேன். அவர்கள், ஐரோப்பா மற்றும் பிறரை கவனிக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் டிரம்ப், வெள்ளை மாளிகையில் இருந்து துருக்கி ஜனாதிபதி எர்டோகனிடம் தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார்.

அப்போது அவர், சிரியாவில் மனிதாபிமானமற்ற முறையில் செயல்பட்டால், துருக்கி மிகவும் மோசமான பொருளாதார கோபத்தை அனுபவிக்கக்கூடும் என்று தெரிவித்தார்.

AP Photo/Evan Vucci

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்