குழந்தையை விற்று கார் வாங்கிய பெண்: எப்படி சிக்கினார் தெரியுமா?

Report Print Balamanuvelan in அமெரிக்கா

அமெரிக்காவின் வட கரோலினாவில், பழைய கார் ஒன்றை வாங்குவதற்காக, பெண் ஒருவர் தனது இரண்டு வயது குழந்தையையே விற்றுள்ளது தெரியவந்துள்ளது.

Tina Marie Chavis (47) மற்றும் Vicenio Mendoza Romero (53) இருவரும் குழந்தை ஒன்றை, ஒவ்வாமை பிரச்னைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள்.

அப்போது குழந்தையின் உடலில் சில காயங்கள் காணப்படவே மருத்துவமனை ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

விசாரித்ததில், Tina தான் அந்த குழந்தையை தத்து எடுத்ததாக கூறியுள்ளார்.

ஆனால் அதற்கான ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லாததால் அவர்கள் பொலிசாரை அழைக்க, பொலிசார் அவர்கள் இருவரையும் கைது செய்துள்ளார்கள்.

Tina Marie Chavis (47) -: image:Thomasville Police Dept

பின்னர்தான், அவர்களுக்கு உண்மை தெரியவந்துள்ளது.

அதாவது, அந்த குழந்தையின் தாயாகிய Alice Lean Todd(45), Tinaவின் பழைய கார் ஒன்றை வாங்கிவிட்டு, அதற்கு பதிலாக தனது இரண்டு வயது குழந்தையை அவருக்கு கொடுத்துள்ளது தெரியவந்தது.

Alice Lean Todd, 45 :- image: Thomasville Police Dept

பொலிசார், Tina, Romero மற்றும் Alice உள்ளிட்ட மூவரையும் கைது செய்துள்ளனர்.

குழந்தை, உறவினர் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணை தொடர்கிறது.

Vicenio Mendoza Romero,53 -: image: Thomasville Police Dept

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்