ஆபத்தான உயரத்தில் சிலையின் மீது நிர்வாணமாக சிக்கிக்கொண்டிருந்த இளம்பெண்

Report Print Vijay Amburore in அமெரிக்கா

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் செயிண்ட் பேட்ரிக் கதீட்ரல் வளாகத்தில் உள்ள சிலையின் மீது அமர்ந்திருந்த இளம்பெண்ணை நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் பொலிஸார் பத்திரமாக மீட்டுள்ளனர்.

டெக்ஸாஸ் மாகாணத்தின் செயிண்ட் பேட்ரிக் கதீட்ரல் வளாகத்தில் உள்ள செயிண்ட் இக்னேஷியஸ் சிலையின் மீது இளம்பெண் ஒருவர் ஆடையில்லாமல் அமர்ந்திருப்பதாக உள்ளூர் நேரப்படி காலை 8 மணிக்கு பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், இளம்பெண்ணை மீட்க நீண்ட நேரம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் அந்த பெண் எந்த பதிலும் தெரிவிக்காமல் சிலை மீது நீண்ட நேரம் அமர்ந்திருந்துள்ளார்.

மதியம் 12:25 மணியளவில் அந்த பெண், சிலையிலிருந்து தடுமாறியுள்ளார். இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட பொலிஸார், கையை பிடித்து இழுத்து பத்திரமாக மீட்டெடுத்தனர்.

இதுகுறித்து கூறிய பொலிஸார், சம்மந்தப்பட்ட பெண் பற்றிய தகவல் இன்னும் கண்டறியப்படவில்லை. மனநிலை பாதிக்கப்பட்டவர் போல இருப்பதால் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்