காரில் அருகில் இருந்த பெண்ணின் தொடையில் துப்பாக்கியால் சுட்ட நாய்... வலியால் கதறிய பரிதாபம்

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவில் காரில் பயணம் செய்த போது நாய், உடனிருந்த பெண்ணின் தொடையில் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Oklahoma மாகாணத்தில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. பிரண்ட் பார்க்ஸ் (79) என்ற நபர் தனது காரை ஓட்டி சென்றுள்ளார்.

காரின் பின்புறம் அவரின் பெண் உதவியாளரான டினாவும் , மோலி என்ற பிரண்ட் வளர்க்கும் நாயும் இருந்தது.

கார் சென்று கொண்டிருந்த போது ரயில்வே கேட் வந்தது, அப்போது நாய் திடீரென ஆக்ரோஷமானது, இதையடுத்து அங்கு லோட் செய்யப்பட்டிருந்த பிரண்டின் துப்பாக்கியை டினாவை நோக்கி நாய் அழுத்தியதில் அது அவரின் தொடையை பதம் பார்த்தது.

இதனால் ரத்தம் வழிந்த நிலையில் அவர் வலியால் துடித்தார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பிரண்ட் பொலிசுக்கு போன் செய்து நடந்தவற்றை கூறினார். அப்போது பொலிசார், நாய் துப்பாக்கியால் பெண்ணை சுட்டதா என கேட்டு அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தனர்.

இதையடுத்து இது தவறுதலாக நடந்த விபத்து என பிரண்ட் விளக்கமளித்தார்.

பின்னர் துப்பாக்கி குண்டடிப்பட்ட டினா ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையில் தன்னுடைய துப்பாக்கியை சுடும் வகையில் தயார் நிலையில் தான் எப்போதும் வைத்திருக்க மாட்டேன் என பிரண்ட் தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்