முதலையின் வாயில் பீரை ஊற்ற முயன்ற நபருக்கு நேர்ந்த கதி... என்ன நடந்தது தெரியுமா?

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவில் முதலையின் வாயில் பீரை ஊற்றி குடிக்க வற்புறுத்திய நபர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்தவர்கள் Timothy Kepke(27) மற்றும் Noah Osborne(22). இரண்டு பேரும் நண்பர்கள் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் The Florida Fish and Wildlife Conservation Commission கடந்த ஆகஸ்ட் மாதம் Timothy Kepke முதலையை வற்புறுத்தி பீரை குடிக்க வைக்க முயன்றதாக புகார் தெரிவித்துள்ளது.

அதிலும் குறிப்பாக அவர் ஒரு புறம் தன்னுடைய கையில் ஏதோ ஒன்றை காண்பித்து முதலையின் வாயை திறக்க வைத்து இந்த செயலை செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ இருந்த போதும், ஆனால் அந்த வீடியோ வெளியாகவில்லை.

(Picture: Facebook/Getty)

இருப்பினும் சட்டவிரோதமாக நடந்து கொண்டதால் Timothy Kepke மற்றும் Noah Osborne ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதில் Timothy Kepke-வை கடந்த 17-ஆம் திகதி பொலிசார் விசாரணை மேற்கொண்ட போது, அவர் நான் குடிபோதையில் இதை செய்யவில்லை எனவும், முதலையின் வாயில் உற்ற முயற்சிக்கும் முன்பு தன்னிடம் சில பியர் இருந்ததாக ஒப்புக் கொண்டார்.

இந்த சம்பவத்தை நேரில் கண்ட பெண்கள் பொலிசாரிடம் கூறுகையில், குறித்த நபர் பீர் ஊற்றிய பின்னர் முதலை ஆக்ரோஷமாக நடந்துகொண்டது என்று கூறியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட அவர்கள் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், ஜாமினில் குறிப்பிட்ட தொகை கட்டிய பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்