வெளிநாட்டு விமானநிலையத்தில் கைது செய்யப்பட்ட ரஜினியின் உறவுக்கார பெண்... நடந்தது என்ன?

Report Print Santhan in அமெரிக்கா

பிரபல திரைப்பட நடிகரான ரஜினி மனைவியின் அக்கா மகள் விமானநிலையத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் வைரலான நிலையில், அது குறித்து அவர் ஆடியோ மூலம் விளக்கம் கொடுத்துள்ளார்.

தமிழகத்தில் புகழின் உச்சியில் இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் என்ன செய்தாலும் சரி, அவருடைய உறவினர்களுக்கு என்ன நடந்தாலும் சரி அது அடுத்த சில நிமிடங்களில் செய்தியாக மாறிவிடும்.

அந்த வகையில் இவர் மனைவியின் அக்கா மகளும், நடிகர் ஒ.ஜி. மகேந்திராவின் மகளுமான மதுவந்தி கடந்த 4-ஆம் திகதி சென்னையில் இருந்து சிக்காகோவிற்கு சென்றுள்ளனர்.

அப்போது திடீரென்று விமானநிலையத்தில் இருந்த அதிகாரிகள் மதுவந்தி மற்றும் அவருடன் நாடக நிகழ்ச்சிக்காக வந்திருந்த நான்கு பேரையும் அதிகாரிகள் கைது செய்துவிட்டதாகவும், பி3 விசா என்ற விசாவில் தான் சிகாகோவிற்கு செல்ல வேண்டும் என்ற விதி உள்ளது, ஆனால் மதுவந்தி மற்றும் அவர்களுடன் சென்றவர்களின் விசா பி1 விசாவில் சென்றதன் காரணமாகவே கைது செய்யப்பட்டதாக செய்தி வெளியானது.

இந்நிலையில் மதுவந்தி தான் கைது செய்யப்பட்டது குறித்து ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், விசா முறையாக இல்லையென்று அதிகாரிகள் சொன்னதால் தாங்களே சென்னை வந்து சரியான விசாவுக்கு (P3 Category) விண்ணப்பித்ததாகவும், மற்றபடி கைது செய்யப்பட்டதாக வந்ததெல்லாம் வீண் வதந்தி என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்