வலுக்கட்டாய முத்தம்... திருமணமான பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட அதிபர் டிரம்ப்!

Report Print Vijay Amburore in அமெரிக்கா

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது பல பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருக்கும் நிலையில் தற்போது, கரேன் ஜான்சன் என்கிற நடன கலைஞர் புகார் கூறியுள்ளார்.

தற்போதைய அமெரிக்க அதிபரால் பாலியல் குற்றச்சாட்டுக்களுக்கு ஆளான பெண்களின் வாக்குமூலங்களை வைத்து எழுத்தாளர்கள் பாரி லெவின் மற்றும் மோனிக் எல்-ஃபைஸி ஆகியோர், 'ஆல் தி பிரசிடென்ட் வுமன்: டொனால்ட் டிரம்ப் அண்ட் தி மேக்கிங் ஆஃப் எ பிரிடேட்டர்' என்கிற புத்தகம் ஒன்றினை வெளியிட உள்ளனர்.

ஏற்கனவே அதிபர் டிரம்ப் மீது 20க்கும் அதிகமான பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருக்கும் நிலையில், இந்த புத்தகத்தில், 43 புதிய பாலியல் குற்றச்சாட்டுக்கள் இடம்பெற்றுள்ளன.

புத்தகமானது அக்டோபர் 22ம் திகதியன்று வெளியிடப்பட உள்ளது. அதற்கு முன்னதாக புத்தகத்தின் ஆசிரியர்கள், முன்னாள் நடனக் கலைஞர் ஜான்சன் கூறியுள்ள அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டை புதன்கிழமையன்று வெளியிட்டனர்.

2000திற்கு முந்தைய காலத்தில் மெலனியாவுடன், டிரம்ப் டேட்டிங்கில் இருந்த சமயத்தில் தான் அந்த சம்பவம் நடந்துள்ளது. டிரம்பின் சொந்த கிளப்பான மார்-எ-லாகோவில் புத்தாண்டு இரவு விருந்திற்கு ஜான்சன் தன்னுடைய உடல்நிலை சரியில்லாத கணவன் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் சென்றிருந்துள்ளார்.

மெலனியா, மேல்மாடியில் இருந்ததை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட டிரம்ப், கழிவறைக்கு சென்றுகொண்டிருந்த ஜான்சனிடம் தவறாக நடக்க முயற்சித்து வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்துள்ளார்.

அதோடு அல்லாமல் அடுத்து இரண்டு வாரங்கலில் அடிக்கடி ஜான்சனுக்கு போன் செய்து தொடர் தொல்லை கொடுத்து வந்திருப்பதாக புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல, 1998 ஆம் ஆண்டில் மெலனியாவுடன் டேட்டிங் தொடங்குவதற்கு சற்று முன்னர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மாடல் காரா யங்கிடம் டிரம்ப் கெஞ்சியதாகவும் புத்தகம் கூறுகிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்