புற்றுநோய் சிகிச்சைக்காக மருத்துவமனை சென்ற இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி! பலரால் பார்க்கப்பட்ட வீடியோ

Report Print Raju Raju in அமெரிக்கா

புற்றுநோய் பாதிப்புக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இளம் பெண்ணை வைத்து பல்வேறு ஆராய்ச்சிகள் செய்ய மருத்துவர்கள் செய்த செயல் குறித்து அவர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த ஸ்கீடர் மகாவின் என்ற இளம் பெண் Twitch streamer எனப்படும் வீடீயோக்களை நேரடியாக ஒளிபரப்பும் பணி செய்து வருகிறார்.

இவருக்கு உடல்நலம் சரியில்லாமல் போன நிலையில் மருத்துவ பரிசோதனையில் Chronic Myelogenous Leukemia என்ற எலும்பு மஜ்ஜை புற்றுநோய் இருப்பது தெரியவந்தது.

இதற்கான சிகிச்சையை அவர் மருத்துவமனையில் தங்கி எடுத்து வந்தார்.

இந்நிலையில் தன்னுடைய அனுமதி இல்லாமல் தன்னை வைத்து பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ள மருத்துவர்கள் முயல்வதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில், என்னிடம் சில ஆவணங்களில் மருத்துவர்கள் கையெழுத்திட கேட்க நான் மறுத்துவிட்டேன், ஆனால் என்னை நைசாக ஏமாற்றி பின்னர் கையெழுத்து வாங்கிவிட்டனர்.

சில தினங்களுக்கு முன்னர் நான் மட்டும் மருத்துவமனையின் என் அறையில் தனியாக இருந்த போது அது தொடர்பான ஆவணங்களை பார்த்தேன், அப்போது எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

காரணம் என்னை வைத்து ஆராய்ச்சி நடத்த மருத்துவர்கள் திட்டமிட்ட ஆவணத்தில் அவர்கள் கையெழுத்து வாங்கியது என தெரியவந்தது என கூறியுள்ளார்.

இது தொடர்பான வீடியோ 85,000-க்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது.

இதை பார்த்த பார்வையாளர்கள் ஸ்கீடருக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

இது தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்