அமெரிக்காவில் தான் ஆசையாக வளர்த்து வந்த மலைப்பாம்புகளை கொள்ளையடித்து சென்றுவிட்டதால், அதன் உரிமையாள தன்னுடைய பாம்புகளை தன்னிடம் வந்து கொடுத்துவிடும் படி சமூகவலைத்தளங்களில் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்தவர் கண்டி. பாம்பின் மீது அதிக் அக்கறை கொண்ட, இவர் அவற்றை இனப்பெருக்கும் செய்து விற்று வருகிறார்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை சான் ஜோஸில் உள்ள மார்டின் லூதர் கிங் நூலகத்திற்கு பாம்புகள் பற்றி விளக்கம் அளிப்பதற்காக சென்றுள்ளார்.
விளக்கம் அளித்த அவர் அதன் பின் வந்து தன்னுடைய காரின் கதவை திறந்து பார்த்த போது, உள்ளே பாம்புகள் இருந்த பை காணமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
தான் ஆசையாக வளர்த்து வந்த பாம்புகளை காணவில்லை என்பதால், மிகுந்த வேதனையடைந்த அவர் உடனடியாக அது குறித்து சமூகவலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், தன்னுடைய பாம்புகளை யாரோ திருடி சென்றுவிட்டதாகவும், அதை நீங்கள் யாராவது பார்த்தால் உடனடியாக தெரிவிக்கும் படி, பாம்பின் நிறம், அதற்கு இவர் வைத்த பெயர் போன்றவைகளை தெரிவித்திருந்தார்.
அதன் பின் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்ததால், பொலிசார் அங்கிருக்கும் சிசிடிவி காட்சிகளை வைத்து திருடர்களை தேடி வருகின்றனர்.