கார் பார்க்கிங்கில் தனியே நடமாடிய குழந்தை: ஹொட்டல் அறையில் பொலிசார் கண்ட காட்சி!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

கார் பார்க்கிங்கில் குழந்தை ஒன்று தனியே நடமாடுவதைக் கண்ட பொலிசார், அந்த குழந்தையை அதன் பெற்றோர் தங்கியிருந்த அறைக்கு கொண்டு சென்றால், அங்கும் பெரியவர்கள் யாரும் இல்லாமல், ஒரு குழந்தை தனியாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்திருகின்றனர்.

கலிபோர்னியாவில் ஒரு ஹொட்டலின் கார் பார்க்கிங்கில் ஒரு வயது குழந்தை ஒன்று தனியாக நடமாடுவதைக் கண்ட பொலிசார், அதை தூக்கிக்கொண்டு அந்த ஹொட்டலுக்குள் சென்றிருகின்றனர்.

அங்கு ஒரு அறை திறந்து கிடக்க, அங்கு இரண்டு வயது குழந்தை ஒன்று தனியாக இருந்திருக்கிறது.

குழந்தையின் பெற்றோரை எங்கு தேடியும் காணாமல் திகைக்க, அரை மணி நேரத்திற்குப்பின் குழந்தைகளின் தந்தையான Joseph Salas (50) ஹொட்டல் அறைக்கு வந்திருக்கிறார்.

தந்தையையும் பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு பொலிசார் காவல் நிலையம் செல்ல, சிறிது நேரத்திற்குப்பின் குழந்தைகளின் தாயான Tamara Ross (32) காவல் நிலையத்திற்கு வந்திருக்கிறார்.

பின்னர், அந்த பெற்றோர், தங்கள் குழந்தைகளை மூன்று மணி நேரம் தனியே விட்டு விட்டு குடிக்க சென்றது தெரியவந்துள்ளது.

அத்துடன், Joseph கஞ்சா போதையிலிருந்ததும், Tamara குடிபோதையில் காவல் நிலையத்துக்கு கார் ஓட்டி வந்ததும் தெரியவந்துள்ளது.

இருவர் மீதும், குழந்தைகள் நலனுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியது மற்றும் போதை குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, குழந்தைகள் அரசு காப்பகத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்