திடீரென சரிந்து விழுந்த 18 மாடி ஹோட்டல்... தெறித்து ஓடிய பொதுமக்கள்: அதிர்ச்சி வீடியோ

Report Print Vijay Amburore in அமெரிக்கா
1159Shares

அமெரிக்காவில் கட்டுமான பணியின் போது 18 மாடி கட்டிடம் திடீரென சரிந்து விழுந்ததில், குறைந்தபட்சம் ஒருவர் பலியானதோடு, 18 பேர் காயமடைந்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

லூசியானா மாகாணத்தின் நியூ ஆர்லியன்ஸில் உள்ள 18 மாடி ஹார்ட் ராக் ஹோட்டல் கட்டுமான பணியின் போது, இன்று காலை 9 மணியளவில் (உள்ளூர் நேரப்படி) திடீரென சரிந்து விழுந்துள்ளது.

இந்த சம்பவத்தில் குறைந்தபட்சம் ஒருவர் பலியாகியிருப்பதாகவும், 18 பேர் காயமடைந்திருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. மேலும், மூன்று பேர் மாயமாகியிருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்டிடம் சரிந்து விழுந்ததற்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இதுகுறித்து தீயணைப்பு துறையின் தலைவர் டிம் மெக்கானெல் கூறுகையில், கட்டிடத்தின் மேல் ஆறு முதல் எட்டு தளங்கள் இடிந்து விழுந்துள்ளன. கட்டிடம் சீரற்ற நிலையில் இருப்பதால் இன்னும் சரிந்து விழ வாய்ப்புள்ளது என கூறியுள்ளார்.

இந்த நிலையில் அதிர்ச்சியளிக்கும் அந்த வீடியோ காட்சியானது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்