அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் மொத்த குடும்பத்தையும் கொன்று சடலத்துடன் காரில் வலம் வந்த இந்தியர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
அவர் பயன்படுத்திய காரில் இருந்து ஆண் ஒருவரின் சடலத்தையும் பொலிசார் மீட்டுள்ளனர்.
தொடர்புடைய நான்கு கொலைகளையும் தாமே செய்ததாக பொலிசாரிடம் அவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அவரது குடியிருப்பில் இருந்து மேலும் 3 சடலங்களை பொலிசார் மீட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் 53 வயதான சங்கர் நாகப்பா என்பவர் கைதாகியுள்ளார்.
திங்களன்று பகல் உள்ளூர் நேரப்படி 12.10 மணியளவில் மவுண்ட் சாஸ்தா காவல் நிலையத்திற்கு சென்ற சங்கர் நாகப்பா தாம் கொலை செய்துள்ளதயும், தமது காரில் சடலம் ஒன்று இருப்பதையும் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

அவர் குறிப்பிட்ட முகவரிக்கு சென்று சோதனையிட்ட பொலிசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
இரு சிறார்களின் சடலம் உள்ளிட்ட மூன்று பேரின் சடலங்களை அங்கிருந்து பொலிசார் மீட்டுள்ளனர்.
கொலைக்கான காரணம் தொடர்பில் சங்கர் இதுவரை பொலிசாரிடம் எந்த தகவலையும் வெளிப்படுத்தவில்லை என கூறப்படுகிறது.
சுமார் 420 கி.மீ தொலைவு காரில் பயணித்து பின்னரே பொலிசாரை அணுகியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
நான்கு பேரையும் தாமே கொலை செய்துள்ளதாக சங்கர் தெரிவித்திருந்தாலும், வெளியில் இருந்து இவருக்கு ஏதேனும் உதவி கிடைத்ததா என்பது தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.