தத்தெடுக்கப்பட்ட குட்டி தேவதை ஒருத்தி, தன் தாயிடம், அவரை தான் முதன்முறையாக பார்த்தபோது, தனக்கு என்ன நடந்தது என்பதை தனது மாஜிக் மொழியில் விளக்கும் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.
டெக்சாசிலிருக்கும் ஒரு தம்பதி, Gaby மற்றும் Lily என்னும் குழந்தைகளை தத்தெடுத்திருக்கிறார்கள்.
அதில் Gaby என்னும் குழந்தை, தனது மழலை ஆங்கிலத்தில், தன் தாயிடம் தன்னை அவர்கள் தத்தெடுத்தபோது தான் எப்படி உணர்ந்தேன் என்பதை விவரிக்கிறாள்.
அவள் பேசுவதைக் கேட்டால், ஒரு சாதாரண குழந்தை பேசுவது போல் இல்லை.
இந்த வீடியோவை பார்த்த ஒருவர், சொர்க்கத்திலிருந்து அனுப்பப்பட்ட தேவதை போல் இருக்கிறாள் அவள், இவள்தான் தலாய் லாமா என்று சொன்னால் கூட நான் நம்பிவிடுவேன் என்று கூறியுள்ளார். அவள் பேசுவதும் அப்படித்தான் இருக்கிறது.
நீங்கள் Lilyயை முதன்முறை பார்க்கும்போது அவளுக்கு ஒரு வயது, என்று தங்கையைக் குறித்து கூறத்தொடங்குகிறாள் Gaby.
உங்களையும் எங்கள் அப்பாவையும் பார்க்க நாங்கள் மிகவும் ஆர்வமாக இருந்தோம் என்று கூறும் Gaby, நாங்கள் உங்களை மிகவும் நேசிக்கிறோம், உங்களுக்காகத்தான் நாங்கள் இங்கே இருக்கிறோம் என்று தனது மழலை மொழியில் கூறுகிறாள்.
ஆனால் கை தேர்ந்த, ஒரு மொழிப்புலமை மிக்கவரின் வார்த்தைகள் போல் உள்ளது அவள் பேசும் விதம். Gabyயின் அம்மா, அவள் பேசும் ஒவ்வொரு வாக்கியத்துக்கும் ஆஹா, அப்படியா என மிக ஆர்வமுடன் பதிலளிக்கிறார்.
நானும் உன்னைப் பார்க்க மிகவும் ஆவலாக இருந்தேன் என்கிறார் அவர். உடனே, பெரிய ஆளைப்போல, சரி, எனது இதயத்துக்கு என்ன ஆனது என்று உங்களுக்கு தெரியுமா? என்கிறாள் Gaby.
அடுத்து அவளே தொடர்ந்து, முதல் முறை உங்களை பார்க்கும்போது, எனது இதயம் உங்களை நேசிக்க ஆரம்பித்துவிட்டது என்று Gaby கூற, நெகிழ்ந்து போன அவளது தாய், உணர்ச்சி வசப்பட்ட நிலையில், ம்ம்ம், என் இதயமும் உன்னை நேசிக்க ஆரம்பித்துவிட்டது என்கிறார்.
இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட இந்த வீடியோ, ஏராளமானோரின் உள்ளங்களை கொள்ளை கொண்டுவிட்டது எனலாம்.
சுமார் 300,000 லைக்குகளைப் பெற்ற அந்த வீடியோ, உடனடியாக வைரலானதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை என்பது அதைப்பார்த்தாலே புரியும்!