இந்த உலகிற்கு உங்கள் தலைமை தேவை.. ஆதரவளிக்கும் ஒபாமா! நன்றி கூறிய ட்ரூடோ

Report Print Kabilan in அமெரிக்கா

கனடாவில் தேர்தலைச் சந்திக்கும் அந்நாட்டு ஜனாதிபதி ஜஸ்டின் ட்ரூடோவுக்கு, அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா ஆதரவு தெரிவித்துள்ளார்.

கனடா நாட்டில் வரும் திங்கள்கிழமை பொதுத்தேர்தல் நடைபெற இருக்கிறது. மொத்தம் உள்ள 338 எம்.பி தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடக்க உள்ள நிலையில், பெரும்பான்மையை நிரூபிக்க 170 இடங்கள் தேவை. இதில் தற்போதைய ஜனாதிபதி ஜஸ்டின் ட்ரூடோ இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக போட்டியிடுகிறார்.

லிபர்ல் கட்சி சார்பில் ட்ரூடோ களம்காணும் நிலையில், அவருக்கு போட்டியாக கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் ஆண்ட்ரூ ஸ்ஷீர் மற்றும் நியூ டெமாக்ரடிக் கட்சி சார்பில் ஜக்மீத் சிங் ஆகியோர் களத்தில் இருக்கின்றனர்.

ஆனால், இந்த தேர்தலில் ட்ரூடோ பெரும்பான்மையை இழப்பார் என்று பல்வேறு கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா, இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக ட்ரூடோ தேர்வாக ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், ‘ஜனாதிபதியாக ஜஸ்டின் ட்ரூடோவுடன் பணியாற்றியதற்காக பெருமைப்படுகிறேன். கடின உழைப்பாளியான அவர், காலநிலை மாற்றம் உள்ளிட்ட பிரச்னைகளுக்காக போராடுபவர்.

இன்றைய சூழலில் உலகுக்கு முற்போக்கான அவரது தலைமை தேவை. அண்டைநாட்டு மக்கள் அவர் இரண்டாவது முறையாக ஜனாதிபதியாவதற்கு ஆதரவளிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த ட்ரூடோ, ‘நன்றி நண்பரே. முன்னேற்றத்தை தொடர கடுமையாக உழைக்கிறோம்’ என பதிவிட்டிருக்கிறார்.

ஒபாமா அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்தபோது, கடந்த 2016ஆம் ஆண்டு கனடாவின் ஜனாதிபதி ட்ரூடோ அங்கு சென்றார். அவரை வரவேற்ற ஒபாமா, ஜனாதிபதி மாளிகையில் கவுரவப்படுத்தினார்.

இருபது ஆண்டுகளில் அமெரிக்க தரப்பில் இவ்வாறு கவுரவிக்கப்பட்ட முதல் கனடா ஜனாதிபதி ட்ரூடோ தான். அதன் பின்னர், ஒபாமா பதவியில் இருந்து விலகிய பிறகும் இருவரும் பரஸ்பரம் நட்பு பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Twitter

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்