வெளிநாட்டில் இலங்கை தமிழரை நெகிழ வைத்த பிரபல தமிழ்ப்பட நடிகை!

Report Print Raju Raju in அமெரிக்கா

நடிகையும், பாட்டி வைத்தியம் நிகழ்ச்சி மூலம் உலகமெங்கும் பிரபலமானவருமான ரேவதி சங்கரன் அமெரிக்காவில் உள்ள ஹோட்டலுக்கு சென்ற போது இலங்கை தமிழர் ஒருவர் கேட்ட உணவை தயாரித்து கொடுத்து அசத்தியிருக்கிறார்.

மிடில் கிளாஸ் மாதவன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ள ரேவதி சங்கரன் அண்ணி, அல்லி தர்பார் போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார்.

இவர் பாட்டி வைத்தியம் என்ற நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் நடத்திய நிலையில் உலகெங்கிலும் புகழ்பெற்றார்.

இந்நிலையில் அமெரிக்காவில் வசிக்கும் தனது பிள்ளைகளை பார்க்க சென்ற ரேவதி அவர்களுடன் ஹொட்டலுக்கு சாப்பிட சென்றார்.

அப்போது அங்கிருந்த இலங்கை தமிழர் ஒருவர் ரேவதியை அடையாளம் கண்டு கொண்ட நிலையில் அவரிடம் வந்து அன்பாக பேசினார்.

பின்னர் தனக்கு பழைய சாதம் சாப்பிட வேண்டும் என தோன்றுவதாகவும் சமைத்து தருவீர்களா என்றும் ரேவதியிடம் அவர் கேட்க நிச்சயம் செய்து தருவதாக கூறினார்.

பின்னர் அந்த ஹொட்டல் ஊழியர்களிடம் தமிழ் பாரம்பரிய முறையில் மண் சட்டியில் பாசுமதி அரிசி போட்டு சாதம் வடித்து தண்ணீர் ஊற்றி ஊறவைக்க சொன்ன ரேவதி தான் அடுத்தநாள் வருவதாகவும், அந்த இலங்கை தமிழரையும் அடுத்த நாள் வரும்படியும் சொன்னார்.

அதே போல மறுநாள் வந்து மண்சட்டி சாதத்தை கேட்க ஹொட்டல் ஊழியர் கொண்டு வந்து கொடுத்து இருக்கார்.

பின்னர் அதில் தயிர், உப்பு, வெங்காயம் பச்சை மிளகா போட்டு பிசைந்து இலங்கை தமிழருக்கு கொடுக்க அவர் உட்பட அனைவரும் அதை சாப்பிட்டுள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்