தரையிறங்கும் போது ஓடுபாதையில் இருந்து விலகி ஆற்றுக்குள் பாய்ந்த விமானம்.. மரண பீதியில் கதறிய மாணவர்கள்

Report Print Basu in அமெரிக்கா

அமெரிக்காவில் பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்கும் போது விபத்துக்குள்ளாகி அருகில் இருந்து ஆற்றுக்குள் பாய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Aleutian தீவில் உள்ள Unalaska விமான நிலையத்தில் PenAir விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

உயிர்பள்ளியின் நீச்சல் வீரர்கள் குழு உட்பட சுமார் 38 பேருடன் Anchorage-வில் Unalaska பயணித்த விமானம், Unalaska விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளாகி அருகிலிருந்து ஆற்றுக்குள் பாய்ந்துள்ளது.

இந்த விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எனினும், விபத்தால் மரண பீதியடைந்த பள்ளி மாணவர்கள் அனைவரும் பத்திரமாக இருப்பதாக பள்ளி நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Twitter

விமான நிலையத்தின் ஓடுபாதை சிறியதாக அமைந்திருப்பதே இந்த விபத்திற்கான காரணம் என கூறப்படுகிறது. விபத்துக்குள்ளானதில் விமானத்தில் முன் பகுதி சேதடைந்துள்ளதால் மீட்பு பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Twitter

விபத்து தொடர்பாக பல வதந்திகள் பரவி வரும் நிலையில், சம்பவம் தொடர்பில் முழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Twitter

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்