இந்தியாவும் சீனாவும் எங்கள் நாட்டை கொள்ளையடிக்கின்றன..! கொந்தளித்த டிரம்ப்

Report Print Kabilan in அமெரிக்கா

இந்தியாவும், சீனாவும் அமெரிக்காவை மோசடி செய்து கொள்ளையடிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கொந்தளித்துள்ளார்.

உலக வர்த்தக கழகத்தின் வகைப்பாட்டின்படி ஆசிய நாடுகளான இந்தியா மற்றும் சீனா வளரும் நாடுகள் ஆகும். இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் வர்த்தகத்தில் நன்மைகள் கிடைக்கின்றன.

இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் உலக வர்த்தக கழகத்திற்கு தமது நிர்வாகம் கடிதம் எழுதியிருப்பதாக தெரிவித்துள்ளார். அந்த கடிதத்தில் இந்தியாவையும், சீனாவையும் வளரும் நாடுகளாக கருதக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், ‘இந்தியாவும், சீனாவும் அமெரிக்காவை கொள்ளையடிப்பதால் அவற்றை வளரும் நாடுகளாக நாங்கள் கருதவில்லை’ என தெரிவித்துள்ளார்.

இந்த நாடுகளின் மீது ஏற்கனவே டிரம்ப் அதிரடி நடவடிக்கைகளை எடுத்திருந்தார். சீனாவும், அமெரிக்காவும் வர்த்தகப் போரில் ஈடுபட்டுள்ள நிலையில், அந்நாட்டின் இறக்குமதிகள் மீது அமெரிக்கா வரி விதிப்புகளை பல மடங்கு அதிகப்படுத்தியுள்ளது.

இதேபோல், இந்தியாவிற்கான சிறப்பு வர்த்தக அந்தஸ்தை டிரம்ப் ரத்து செய்தார். அத்துடன் அமெரிக்க ஏற்றுமதிகள் மீது இந்தியா மிக அதிகமாக வரி விதிப்பதாக அவர் தொடர்ந்து குறைகூறி வருவது குறிப்பிடத்தக்கது.

Win McNamee/Getty Images

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்