சிறுவனை கவனித்துக்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட பெண்: அவனது குழந்தைக்கே தாயான கோரம்!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

11 வயது சிறுவன் ஒருவனை கவனித்துக்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட ஒரு பெண், அவனுடன் நெருங்கி பழகி அவனது குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார்.

ப்ளோரிடாவைச் சேர்ந்த Marissa Mowry என்ற பெண், Hillsborough என்ற பகுதியில் வசிக்கும் 11 வயது சிறுவனுடன் பாலியல் ரீதியான உறவு கொண்டு கர்ப்பமடைந்திருக்கிறார்.

அப்போது Marissaவுக்கு வயது 22, அவர் பெற்றோர் இல்லாத நேரத்தில் அந்த சிறுவனை கவனித்துக்கொள்வதற்காக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் அந்த குழந்தையை பெற்றெடுத்தபோது அது தங்களுடைய மகனுக்கு பிறந்த குழந்தை என்பதை அறியாத அந்த சிறுவனின் பெற்றோர், Marissaவை சென்று சந்தித்து குழந்தையைக் கண்டு நலம் விசாரித்து வந்திருக்கிறார்கள்.

Marissa அந்த சிறுவனை பல மாதங்களாக, சுமார் 15 முறையாவது பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

ஆனால், தன்னை Marissa பாலியல் துஷ்பிரயோகம் செய்ததை, அந்த சிறுவன் தன் பெற்றோரிடம் கூறவேயில்லை.

பின்னர் 2017ஆம் ஆண்டு அவன் தன் பெற்றோரிடம் நடந்ததைக் கூற, Marissa கைது செய்யப்பட்டார்.

முதலில் Marissaவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதுடன், அவர் விடுவிக்கப்பட்டதும், அவர் ஒரு பாலியல் குற்றவாளியாக பதிவு செய்யப்படுவார் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

இதற்கிடையில், Marissa மற்றொரு பதின்ம வயது சிறுவனுடன் பழகி, அவனையும் துஷ்பிரயோகம் செய்து, அவனுடனும் ஒரு குழந்தை பெற்றுக்கொண்டதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

பின்னர், கடந்த புதன் கிழமை, Marissa அந்த சிறுவர்கள் சம்மதமின்றி அவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக ஒப்புக்கொண்டதையடுத்து அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்