நள்ளிரவில் கேட்ட அலறல் சத்தம்.... மளமளவென பற்றியெரிந்த தீ: சில நொடியில் ஏற்பட்ட துயரம்

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் தீடீரென்று ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி சுமார் 10 குடியிருப்புகள் முற்றாக சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவத்தால் சுமார் குழந்தைகள் பெண்கள் உள்ளிட்ட 30 பேர் குடியிருப்புகளை இழந்து பரிதவிப்பதாக தெரியவந்துள்ளது.

ஞாயிறன்று உள்ளூர் நேரப்படி அதிகாலை 3.20 மணியளவில் மீட்பு மற்றும் தீயணைப்பு குழுவினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள Allentown நகரில் இருந்தே உதவிக்கு அழைத்துள்ளனர்.

குடியிருப்பு ஒன்றில் இருந்து படர்ந்த தீ, அதன் அருகாமையில் அமைந்துள்ள குடியிருப்புகளில் வியாபித்துள்ளது.

இச்சம்பவத்தால் தூக்கத்தில் இருந்த பலர் அலறியடித்துக் கொண்டு குடியிருப்புகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

இது தொடர்பாக வெளியான காணொளி ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

சுமார் 3 மணியளவில் பயங்கர சத்தம் கேட்டு விழித்துக் கொண்ட அப்பகுதி குடியிருப்புவாசிகள்,

அலறியடித்துக் கொண்டு வெளியேறியுள்ளனர்.

மட்டுமின்றி பலர் தங்கள் அருகாமையில் வசிப்பவர்கள் வெளியேறினார்களா என்பது தொடர்பில் அக்கறையுடன் விசாரித்தும் வந்துள்ளனர்.

இந்த விபத்தில் சிக்கிய சில குடியிருப்புகள் முற்றாக சேதமடைந்துள்ளது எனவும், சில குடியிருப்புகள் பாதிக்கும் மேல் சேதமடைந்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பலரும் தங்களின் வங்கி அட்டைகள் மற்றும் அடையாள அட்டைகளை தொலைத்துள்ளதாகவும், மொத்த பொருட்களையும் தொலைத்துவிட்டு பெருவழியில் நிர்க்கிறோம் என பலரும் கண்கலங்கியுள்ளனர்.

(Lehigh Valley Drone / Special to The Morning Call)
(Lehigh Valley Drone / Special to The Morning Call)
(Lehigh Valley Drone / Special to The Morning Call)
(Lehigh Valley Drone / Special to The Morning Call)

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்