கணவனின் அண்ணனிடம் உயிரணு தானம் கேட்ட பெண்ணுக்கு கிடைத்த அவமானம்!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

அமெரிக்காவில், தன் கணவனால் ஒரு குழந்தைக்கு தந்தையாக முடியாது என்பது தெரியவந்ததையடுத்து, ஒரு பெண் உயிரணு தானம் பெற முடிவு செய்தார்.

ஆனால், தெரியாத யாரோ ஒருவரிடமிருந்து உயிரணு தான் பெறுவதைவிட, தங்கள் உறவினர் ஒருவரிடமிருந்தே தானம் பெறுவது என முடிவு செய்தனர் தம்பதியர்.

அதன்படி, தனது கணவரின் அண்ணனான எரிக் என்பவருக்கு ஒரு குழந்தை இருப்பதாலும், அவர் கல்லூரியில் படிக்கும் காலத்தில் ஏற்கனவே உயிரணு தானம் செய்தவர் என்பதாலும் அவரிடமே உயிரணு தானம் கேட்டனர் தம்பதியர்.

ஆனால், எரிக் தரமுடியாது என்று சொல்லவில்லை, அதற்கு பதிலாக இமெயில் ஒன்றை தம்பதிக்கு அனுப்பினார்.

அதில் தன்னிடம் உயிரணு தானம் பெறவேண்டுமென்றால் என்னவெல்லாம் வேண்டும் என ஒரு பெரிய பட்டியல் போட்டிருந்தார் எரிக்.

அவற்றில் முதலாவது, தன்னிடம் ஒருவர் உயிரணு தானம் பெறவேண்டுமானால், அவருக்கென்று சொந்தமாக வீடு இருக்கவேண்டும், அடுக்குமாடிக் குடியிருப்பு கூட சரி வராது, தனி வீடு வேண்டும்.

அடுத்தது, நல்ல ஒரு வேலையில் செட்டில் ஆகியிருக்கவேண்டும்.

அப்புறம், எரிக் என்ன மதமோ, அதே மதத்திற்கு அவரது தம்பியும் மனைவியும் மதம் மாறவேண்டும், என்று நீண்டுகொண்டே போனது பட்டியல்.

அதாவது ’தன் குழந்தை’ ஒரு நல்ல, வசதியான குடும்பத்தில்தான் வாழ வேண்டும் என்று சொல்வதைப்போல் இருந்தது எரிக்கின் கோரிக்கைகள்.

இதைவிட, பேசாமல் உங்களுக்கு உயிரணு தானம் தரமுடியாது என்றே எரிக் சொல்லியிருக்கலாம் என்கிறார் அந்த பெண்.

அவர், இல்லை என்று சொன்னதைவிட, அதை சொன்ன விதத்தால் தான் நொந்துபோனதாக அவர் தெரிவித்துள்ள அதே நேரத்தில், அவரது கணவரோ, தனது அண்ணனின் நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொள்வோம், நமக்கு எப்படியாவது குழந்தை வேண்டும் என்று கூற, இன்னும் அதிகம் நொந்துபோய்விட்டார் அந்த பெண்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்