மனைவியை கொலை செய்துவிட்டு இரத்தம் தோய்ந்த கைகளுடன் தப்பியோடிய நீதிபதி: ஒரு அதிர்ச்சி வீடியோ!

Report Print Balamanuvelan in அமெரிக்கா
205Shares

பிள்ளைகள் வீட்டுக்குள் இருக்கும்போதே, மனைவியை கொலை செய்துவிட்டு நீதிபதி ஒருவர் தப்பியோடும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் Cuyahoga என்ற பகுதியிலுள்ள நீதிமன்றம் ஒன்றில் நீதிபதியாக இருந்தவர் Lance Mason(52).

தனது மனைவி Aisha Fraserஐ (45) தாக்கியதற்காக, கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், 9 மாதங்களுக்குப்பிறகு ஜாமீனில் வந்திருந்தார் அவர்.

ஜாமீனில் வந்திருந்த நேரத்தில், Mason தனது மனைவி Aishaவை வீட்டின் முன் வைத்து கொலை செய்துள்ளார் அவர்.

அப்போது அவர்களுடைய பிள்ளைகள் வீட்டுக்குள்தான் இருந்திருக்கிறார்கள். பொலிசார் Masonஐ துரத்த, அவர் தனது காரில் தப்பிச் செல்ல முயன்றிருக்கிறார். அப்போது அவரது கார் பொலிசாரின் கார் ஒன்றில் மோதியதில், பொலிசார் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

Masonஇன் காரை பொலிசாரின் கார்கள் சுற்றி வளைக்க, காரிலிருந்து இறங்கிய Mason தப்பியோடி, மீண்டும் வீட்டுக்குள்ளேயே நுழைந்திருக்கிறார். வீட்டுக்குள் புகுந்த பொலிசார் அவரைக் கைது செய்துள்ளார்கள்.

கைகளில் இரத்தம் வழிய வெளியே கொண்டுவரப்படும் அவர், வீட்டுக்குள் சென்றபோது கத்தியால் தன் கையைக் கிழித்துக்கொண்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்படும்போதே தனது செயலுக்கு வருந்தும் Mason, நான் இப்படி செய்தேன் என்று என்னாலேயே நம்பமுடியவில்லை என்கிறார்.

அத்துடன், அவரது வீட்டுக்குள்ளிருந்து அவரது பிள்ளைகளை பொலிசார் பாதுகாப்புக்கான இடத்திற்கு அழைத்துச் செல்லும்போது, ஒரு மகளிடம், என்னை மன்னித்து விடு என அவர் கூறுவதையும் அந்த வீடியோவில் காணமுடிகிறது.

ஆயுள் தண்டனை விதைக்கப்பட்டுள்ள Masonக்கு 35 ஆண்டுகள் கழித்துதான் ஜாமீன் வழங்கப்படும், அதாவது 80 வயதாகும்வரை அவரால் சிறையிலிருந்து வெளியே வரமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்