அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த 20 வயதான எமிலி கோஃபோர்ட் என்கிற இளம்பெண், கடந்த அக்டோபர் மாதம் 28ம் திகதியன்று தன்னுடைய தாய், எரின் உடன் அரிசோனாவின் கிராண்ட் கேன்யன் பகுதிக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார்.
அங்கு எடுக்கப்பட்ட ஒரு பரபரப்பான வீடியோ காட்சியானது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. நீண்ட தூரத்தில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ காட்சியில், எமிலியையும் அவரது தாயையும் குன்றின் மீது காணலாம். அதைச் சுற்றி எந்த பாதுகாப்பு தடைகளும் இல்லை.
முன்னோக்கி வருமாறு எரின் கூறிக்கொண்டிருக்கும் போதே பின் பக்கமாக காலடியை நகற்றிய எமிலி, திடீரென குன்றின் மீதிருந்து தவறுகிறார்.
அதிர்ஷ்டவசமாக, எமிலி முன்னோக்கிச் சென்று குன்றின் மேற்பரப்பில் ஒரு கையை கீழே வைத்து தப்பி பிழைத்தார்.
இதுகுறித்து ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள எரின், எமிலி ஓரத்தில் இருப்பதை பார்த்த நான் "இன்னொரு அடி பின்வாங்க வேண்டாம்" என்று சொன்னேன். என் அடிவயிறு குலுங்கியது. 'நான் ஒரே நேரத்தில் பயந்து கோபமடைந்தேன். அதனால் தான் மேலே சென்று வேகமாக அவளைப் பிடித்தேன்' என்று கூறியுள்ளார்.