சீட் பெல்ட் போடாமல் பயணித்த அழகிய இளம்பெண்: வாழ்நாள் முழுவதும் வடுக்களுடன் வாழவேண்டிய நிலை!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

அமெரிக்கப்பெண் ஒருவர் சாகசப்பயணம் ஒன்றின்போது தான் பயணித்த வாகனத்தில் சீட் பெல்ட் போடாமல் பயணித்ததால், வாழ்நாள் முழுவதும் உடல் முழுவதும் வடுக்களுடன் வாழவேண்டிய நிலைமைக்குள்ளாகியிருக்கிறார்.

நியூ மெக்சிகோவைச் சேர்ந்த Ashley Waldram (27) தனது உறவினர் ஒருவருடன் மணலில் பயணிக்கும் வாகனம் ஒன்றில் சாகசப்பயணம் மேற்கொண்டிருக்கிறார்.

வாகனத்தை ஓட்டிய அவரது மாமா,மிக வேகமாக வாகனத்தை ஓட்டத்துவங்க, Ashley சீட் பெல்ட்டை போட முயன்றபோது வாகனம் குட்டிக்கரணம் அடித்திருக்கிறது.

அவரது மாமா தூக்கி வீசப்பட்டாலும், அவருக்கு குறைவான காயங்களே பட்டிருக்கிறது. ஆனால், Ashleyயின் தலை அந்த வாகனத்திலுள்ள கம்பிகளுக்கு நடுவே சிக்கிக்கொண்டிருக்கிறது.

அத்துடன் உருண்டு புரண்ட Ashleyயின் விலா எலும்புகள் நசுங்கி, கல்லீரலை நசுக்கியுள்ளன.

காயமடைந்த ஈரல், இரத்தக்கசிவு ஏற்பட்ட மூளை, உடல் முழுவதும் கீறல்கள் என மோசமான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட Ashleyக்கு பல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன.

அழகிய உடல் முழுவதும் ஏராளம் தழும்புகளுடன் காணப்படும் Ashley உடல் நலம் தேறிவிட்டாலும், அதிர்ச்சியிலிருந்து இன்னமும் அவரால் வெளிவர முடியவில்லை. குணமடைந்த பின் தன்னை மீட்ட தீயணைப்புப் படையினரை சந்தித்து நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார் Ashley.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்