விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போட மறுத்த கணவனுக்கு மனைவியால் நேர்ந்த கதி... அலறிய பரிதாபம்

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவில் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போட மறுப்பு தெரிவித்த கணவனை மனைவி கத்தியால் சரமாரியாக குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

NASHVILLE நகரை சேர்ந்தவர் தவனா இவன்ஸ் (38). இவர் தனது கணவருடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் கணவரை பிரிய முடிவெடுத்த தவனா இரு தினங்களுக்கு முன்னர் வீட்டு வாசலில் இருந்த காரில் தனியாக உட்கார்ந்திருந்த அவர் அருகில் சென்றார்.

பின்னர் கணவன், மனைவியிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் கணவரிடம் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போடுமாறு தவனா கோரினார்.

ஆனால் கணவர் மறுத்துவிட்ட நிலையில் காரிலிருந்து இறங்கி வெளியில் சென்ற தவனா சிறிது நேரம் கழித்து மீண்டும் அங்கு வந்தார்.

இதையடுத்து தான் வைத்திருந்த கத்தியால் கணவரின் கைகளில் சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பித்தார்.

வலியால் கத்திய தவனாவின் கணவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் நடந்ததை பொலிசாரிடம் வாக்குமூலமாக அளித்துள்ளார்.

இதையடுத்து தவனாவை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்