ஆவிகளுடன் பேசுபவரை காண சென்ற இளம்பெண்: மர்மமான முறையில் மாயம்!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

அமெரிக்க இளம்பெண் ஒருவர் ஆவிகளுடன் பேசுபவர் ஒருவரை காணச் சென்றுள்ளார். அதற்குப்பின் அவர் வீடு திரும்பவேயில்லை.

நியூஜெர்ஸியைச் சேர்ந்த Stephanie Parze (25), புதன்கிழமை இரவு ஆவிகளுடன் பேசுபவர் ஒருவரை காணச் சென்றுள்ளார்.

அதன் பிறகு அவரிடமிருந்து எந்த தகவலும் இல்லை என அவரது பெற்றோர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.

அவரது கார் நிறுத்திய இடத்திலேயே நிற்கும் நிலையில், அவரிடமிருந்து எந்த தகவலும் வராததால் அச்சத்தில் உறைந்திருக்கிறார்கள் பெற்றோர்.

Credit: Facebook

Parze-வின் மொபைல் போனும் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், மொபைல் போன் இல்லாமல் அவள் எங்கும் போக மாட்டாள் தாய் கூறியுள்ளார்.

பொலிசாரும் Stephanie என்ன ஆனார் என்பதற்கு எந்த துப்பும் கிடைக்காததால், அவரைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறிவருகிறார்கள்.

Credit: Facebook

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்