வங்கியில் கோடிக்கணக்கில் பணம் இருந்தும் சாலையோரத்தில் வாழும் கோடீஸ்வரர்! என்ன காரணம் தெரியுமா?

Report Print Raju Raju in அமெரிக்கா

வங்கிகளில் கோடிக்கணக்கான அளவில் பணம் இருந்தும் வீடில்லாமல் சாலையில் வசித்து வந்த கோடீஸ்வரர் மாயமான நிலையில் தற்போது பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் Maplewood-ஐ சேர்ந்தவர் Gary Schaefer.இவருக்கு வீடு இல்லை என்பதால் சாலையிலேயே தங்கியிருந்தார்.

இந்நிலையில் Gary சில மாதங்களாக எங்கிருக்கிறார் என தெரியாத நிலையில் மாயமானார்.

இதனிடையில் சாலையோரத்தில் ஏழ்மையான நிலையில் வசித்து வந்த Gary மிக பெரிய கோடீஸ்வரர் என அவர் பாதுகாவலர் Joe Vaccaro மூலம் சில வாரங்களுக்கு முன்னர் தெரியவந்தது.

Joe அப்போது கூறுகையில், Gary வங்கிக்கணக்கில் அவரி குடும்ப பணம் கோடிக்கணக்கில் உள்ளது.

ஆனால் எதையும் விரும்பாத அவர் சாலையில் வசித்து வந்தார், எல்லா பணமும் அவர் பெயரில் மட்டுமே உள்ளதால் அவருக்கு ஏதேனும் விபரீதம் நேர்ந்தால் அந்த பணம் என்னவாகும் என எனக்கு தெரியாது என கவலை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் Gary இரு தினங்களுக்கு முன்னர் அந்த பகுதியில் இருந்த காப்பகத்தில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளார்.

பெரிய கோடீஸ்வரராக இருந்தும் ஏன் இப்படி வாழ்கிறீர்கள் என அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த Gary, என் வாழ்க்கையில் எனக்கென தனி சுதந்திரம் வேண்டும், நான் என் வாழ்க்கையை அனுபவித்து வாழவே இவ்வாறு செய்தேன் என விசித்திரமான பதிலை கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்