இளம் தந்தைக்கு 100 ஆண்டுகள் சிறை: அவர் செய்த குற்றம் என்ன தெரியுமா?

Report Print Balamanuvelan in அமெரிக்கா

எட்டு மாத பெண் குழந்தையை பயங்கரமாக குலுக்கியதில் அந்த குழந்தை உயிரிழந்ததால், அதன் இளம் தந்தைக்கு 100 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் Lowa என்ற பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றிற்கு, எட்டு மாதக் குழந்தையான Raija கொண்டுவரப்பட்டாள்.

உடலின் உள் பகுதியில் பல காயங்கள் இருந்ததால் அவளை காப்பாற்ற முடியாமல் போய்விட்டது.

அவளது மண்டையோட்டில் பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்ததோடு, அவளது விலா எலும்புகளும் முறிந்திருந்தன.

அவளது தாயான Ri Bambino, தனது குட்டிப்பெண்ணை அவளது தந்தையான Jayden Straight (19) பல முறை தாக்கியதாக புகார் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து Jayden கைது செய்யப்பட்டார்.

அவர் மீது கொலைக்குற்றச்சாட்டு, வேண்டுமென்றே காயப்படுத்தியது, குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்தியது ஆகிய குற்றங்கள் சாட்டப்பட்டுள்ளன.

அவருக்கு அளிக்கப்பட்டுள்ள ஆறு தண்டனைகளைத் தொடர்ந்து சிறையிலடைக்கப்பட்டுள்ள அவரால், 2119 வரை வெளியே வரமுடியாது.

அதாவது 100 ஆண்டுகள் அவர் சிறைத்தண்டனை அனுபவிக்கவேண்டும்.

Raijaவை பரிசோதித்த மருத்துவர் ஒருவர், அவளுக்கு ஏற்பட்டுள்ள காயங்கள் வேண்டுமென்றே தாக்கியதால் ஏற்பட்டவைதான், அவற்றை தெரியாமலோ அல்லது தற்செயலாகவோ நடந்தவை என்று கூற இயலாது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்