உன் மகனும் இந்த தருணத்தில் இருக்க வேண்டும்... தாயை நெகிழ வைத்த நீதிபதி! குவியும் பாராட்டு

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவில் கையில் குழந்தையுடன் நீதிபதி ஒருவர் பெண் வழக்கறிஞருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஜூலியனா லாமர். இவர் அங்கிருக்கும் பெல்மாண்ட் சட்டப் பல்கலைக்கழகத்தில் தனது படிப்பை நிறைவு செய்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு அவருக்கு டென்னிஸி மாகாண நீதிமன்றத்தின் நீதிபதி ரிச்சர்ட் டின்கின்ஸ் வழக்கறிஞராகப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

அப்போது அந்த விழாவில் ஜூலியனா லாமரின் 1 வயது மகனும் இருந்தார். உடனே நீதிபதி குழந்தையை தன்னுடைய கையில் வாங்கிக் கொண்டு, அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இதைக் கண்ட அங்கிருந்த சிலர் வீடியோவாக எடுத்து வெளியிட சமூகவலைத்தளங்களில் வைரலானது, நீதிபதியின் இந்த செயலுக்கு பாராட்டுகள் குவிந்தது.

இந்நிலையில் இது குறித்து ஜூலியனா லாமர் கூறுகையில், என் கணவர் அமெரிக்க இராணுவத்தில் பணியாற்றி வருகிறார். அவருக்கு தான் நான் நன்றி சொல்ல வேண்டும்.

ஏனெனில் அவர் பணியாற்றும் தளம் இங்கிருப்பதால், நான் கல்லூருக்கு செல்லும் நேரங்களில் அவர் குழந்தையை பார்த்து கொள்வார்.

குழந்தையைக் கவனித்துக்கொண்டு படிப்பை தொடர்ந்தபோது பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டேன். அந்த வலிகள் எனக்குத் தெரியும். எதிர்காலத்தில் சட்டக்கல்லூரிகளில் பயில வரும் தாய்மார்களுக்காகப் பல்கலைக்கழகம் தனது விதிகளில் சில மாற்றங்களைக் கொண்டு வரலாம்.

மேலும் இந்த தருணத்தில் நீதிபதி என் மகனும் இருக்க வேண்டும் என்று கூறினார். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

ஏனெனில் என்னுடைய வாழ்க்கையின் முக்கியமான தருணத்தில் இருப்பது உண்மையிலே ஆசீர்வாதம் என்று நெகிழ்ந்தார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்