வானொலி நடத்திய நிகழ்ச்சியின் மூலம் பெற்றோர்களாக மாறிய தம்பதி!

Report Print Vijay Amburore in அமெரிக்கா

அமெரிக்காவில் வானொலி நடத்திய நிகழ்ச்சியானது ஒரு தம்பதியை பெற்றோர்களாக மாற்ற உதவியுள்ளது.

கருவுறாமை என்பது மில்லியன் கணக்கான மக்களை பாதிக்கும் ஒரு பிரச்சினை ஆகும். அமெரிக்க மருத்துவ சங்கம் 2017 ஆம் ஆண்டில், கருவுறாமையை ஒரு நோயாக அறிவித்தது.

அதே வருடத்தில் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த B1039 என்கிற அமெரிக்க வானொலியானாது 'Win a Baby' என்கிற போட்டி ஒன்றினை நடத்தியது. போட்டியின் இறுதியில் வெற்றி பெரும் பெண்ணுக்கு இலவசமாக செயற்கை கருத்தரித்தல் மேற்கொள்ளப்பட்டு குழந்தை பெற்றுக்கொள்ள மருந்துகளை வழங்குவதாகும்.

ஆர்வத்துடன் பலரும் கலந்துகொண்ட இந்த போட்டியில், கிறிஸ்டா மற்றும் அந்தோனி ரிவேரா என்கிற தம்பதியினர் வெற்றி பெற்றதாக சனிக்கிழமையன்று வானொலி நிலையம் தங்களுடைய வலைப்பதிவு இடுகையில் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தம்பதியினர் கூறுகையில், டெஸ்டிகுலர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதை அடுத்து எங்களால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என்பது தெரியவந்தது.

செயற்கை கருத்தரித்தலின் மூலம் மட்டுமே குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்றாலும் கூட அது விலை உயர்ந்ததாக இருந்தது.

இனிமேல் எங்களால் குழந்தையே பெற்றுக்கொள்ள முடியாது என நினைத்தபோது மிகவும் கஷ்டமாக இருந்தது. ஆனால் நாங்கள் எதிர்பாராத திருப்பம் அப்போது தான் எங்களுக்கு நடந்தது.

அந்த போட்டி மட்டும் நடத்தப்படாமல் இருந்தால், ஒரு குழந்தையைப் பெறுவதற்கான எங்கள் கனவை நிச்சயமாக நாங்கள் கொண்டிருக்க முடியாது," என்று கிறிஸ்டா கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்