ஒரே நாளில் இரண்டு லொட்டரிகள் வென்ற அதிர்ஷ்டக்கார பெண்!

Report Print Vijay Amburore in அமெரிக்கா

அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவருக்கு ஒரே நாளில் இரண்டு லொட்டரிகளில் வெற்றி கிடைத்துள்ளது..

அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தை சேர்ந்த மேரிலேண்ட் (23) என்கிற பெண்ணின் கணவர், கெனோ பரிசு சீட்டு ஒன்றினை வாங்கியுள்ளார்.

பின்னர் அதனை வேண்டாம் என்று அவர் தூக்கி எறிந்துவிட்டார். ஆனால் மேரிலேண்ட் அதனை பத்திரமாக எடுத்து வைத்திருந்துள்ளார்.

இந்த நிலையில் மேரிலேண்ட் தன்னுடைய கணவருடன் காலை உணவுக்கு சென்றிருந்த போது அவர்கள் வாங்கியிருந்த கெனோ பரிசு சீட்டில் 12,000 டொலர் கிடைத்துள்ளது. அதனை இருவருமே சமமாக பகிர்ந்துகொண்டுள்ளனர்.

இருந்தாலும், அந்த பரிசுத்தொகை போதாமல் இருந்ததால் மேரி, மற்றொரு பரிசு சீட்டு வாங்கியுள்ளார். அன்றைய தினம் இரவு உணவு சாப்பிடும் போது, அந்த சீட்டிற்கு 16,000 டொலர்கள் பரிசுத்தொகை கிடைத்துள்ளது.

இதனால் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ள மேரி, பணத்தில் சிறிய தொகையை நண்பரின் மகள்களுக்கு செலவு செய்ய இருப்பதாகவும், மீதமுள்ள தொகையை வைத்து ஒரு செப்டிக் டேங்க் டிரக்கை வாங்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்